பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

இந்திர விழவு ஊர் எடுத்த காதை

விதிகள் பொலிவுபெறல் மரகத மணியொடு வயிரம் குயிற்றிப், பவளம் திரள்கால் பைம்பொண் வேதிகை நெடுநிலை மாளிகைக் கடைமுகத்து யாங்கணும் கிம்புரிப் பகுவாய்க் கிளர்முத்து ஒழுக்கத்து. 150 மங்கலம் பொறித்த மகர வாசிகைத் தோரணம் நிலைஇய, தோம்அறு பசும்பொன் பூரண கும்பத்துப் பொலிந்த பாலிகை பாவை விளக்குப் பசும்பொண் படாகை, துர்மயிர்க் கவரி, சுந்தரச் சுண்ணத்து, 155 மேவிய கொள்கை வீதியிற் செறிந்து ஆங்கு

விழுநீர் ஆட்டல் ஐம்பெருங் குழுவும், எண்பேர் ஆயமும், அரச குமரரும், பரத குமரரும், - கவர்பரிப் புரவியர், களிற்றின் தொகுதியர், இவர்பரித் தேரினர், இயைந்து ஒருங்கு ஈண்டி 160 அரைசுமேம் படிஇய, அகநிலை மருங்கில், 'உரைசால் மன்னண் கொற்றம் கொள்க என மா இரு ஞாலத்து மன்னுயிர் காக்கும் ஆயிரத்து ஓர் எட்டு அரசுதலைக் கொண்ட தண் நறுங் காவிரி, தாதுமலி பெருந்துறைப் 165 புண்ணிய நல்நீர் பொற்குடத்து ஏந்தி, மண்ணகம் மருள, வானகம் வியப்ப, விண்ணவர் தலைவனை விழுநீர் ஆட்டிப் பிறவா யாக்கைப் பெரியோண் கோயிலும் அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும் 170 வால்வளை மேனி வாலியோண் கோயிலும் நீல மேனி நெடியோன் கோயிலும் மாலை வெண்குடை மண்னவண் கோயிலும் மாமுது முதல்வண் வாய்மையின் வழாஅ நான்மறை மரபின் திமுறை யொருபால் 175