பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 ஆய்ச்சியர் குரவை

இந்திரன் தந்த பொன்னாரத்தைப் பூண்டான், சோழன் புலிக்கொடியை இமயத்தில் பொறித்தான்; சேரன் கடலில் எதிரிகளின் கடம்ப மரத்தைத் தடிந்தான். இவ்வெற்றி பெற்ற மன்னர்கள் மூவரும் கண்ணனே ஆவர் என்று பாடினர். நாட்டுப் பற்று தெய்வப் பற்றோடு இயைத்துப் பாடினர்.

முன்னிலை வைத்துத் திருமாலைப் பாடுதல்

'மந்தர மலையை மத்தாகவும் வாசுகியைக் கயிறாகவும் கொண்டு நீ பண்டு ஒரு நாள் கடலைக் கடைந்தாய். அத்தகைய நீ யசோதையின் கயிற்றுக்குக் கட்டுப்பட்டுக் கலக்கம் அடையச் செய்தாய். இது முரண்பாடு; இது வியப்புத் தருகிறது.”

'நீ மண்உண்டபோது உன் வயிற்றில் இந்த உலகமே இருப்பதைப் பார்த்தனர். உலகமே உன் வயிற்றில் அடக்கிய நீ இப்பொழுது வெண்ணெய் உண்டது ஏன்? பசித்தா உண்டாய்? உன் விளையாட்டு ஆகாதோ? வியப்பிற்கு உரிய .” து உ ஆகாதே றகு து இது

'இரண்டடியில் மூவுலகு அளந்தாய்; அதற்கு உரியவன் நீ உன் திருவடி சிவக்கப் பாண்டவர்க்குத் துாதாகச் சென்றது ஏன்? மூவுலகும் உனக்கு உரிமையாகியது. அத்தகைய நீ நாடு கேட்கச் சென்றது வியப்பேயாகும்'

படர்க்கையில் வைத்துத் திருமாலைப்பாடுதல்

'தம்பியோடு காடு அடைந்து இராவணன் அரணாகிய

'சோ' என்பதை அழித்தான். அந்த இராமனது வீரம், புகழ் இவற்றைக் கேளாத செவி செவியாகாது'.

'திருமாலைக் காணாத கண் என்ன கண்? இருந்தும் பயனற்றதாகும்; நாரணனை வழுத்தாத நா என்ன நா? அவன்

y

புகழைப் பாடுவோமாக'

'குரவையுள் பாடிப் போற்றிய தெய்வம் நம் கறவை இனத்தைக் காப்பதாக: பாண்டியன் வெற்றி முரசு உலகு எங்கும் கேட்பதாக! இந்திரன் முடியைத் தகர்த்து தொடியணிந்த அவன்தோளின் சிறப்பைப் பாடுவோமாக'என்று பாடினார்.