பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 335

சோழன் ஆண்ட நாடு என்னுடைய நாடு, ஆவின் கண்ணிர் தன் நெஞ்சு சுட்டது. மணியின் நா அவனைத் தட்டி எழுப்பியது. தன் ஒரே மகனைத் தெருவில் கிடத்தித் தேர் கொண்டு உயிர் போக்கிய உயர்ந்தோன் மனுநீதிச் சோழன்; இவர்கள் ஆண்ட நாடு சோழ நாடு: புகார்நகரம் எமது ஊர்”.

"புகார் நகரில் மாசாத்துவான் என்னும் வணிகன் மகன் ஆகிய கோவலன் வாழ்க்கையைத் தேடி ஊழ்வினை துரப்ப நின் நகர் புகுந்தான். என் காற்சிலபைக் காசாக்க வந்தவனை மாசு ஆக்கி உயிர் பறித்தாய்; கொலைக்களப்பட்டான். அக் கோவலன் மனைவி நான்; கண்ணகி என்பது என் பெயர்'

என்று கூறினாள்.

'கள்வனைக் கொன்றது கடுங்கோல் அன்று; அரசனது கடமை' என்று அறிவித்தான் அரசன்.

'நற்றிறம் படராக்கொற்கை வேந்தே! என் காற்சிலம்பு மாணிக்கப்பரல்கள் கொண்டது' என்று எடுத்துக் கூறினாள்; சுற்றி வளைத்துப் பேசாமல் நேராக வழக்கை அவள் எடுத்துப் பேசினாள்.

'எம் சிலம்பு முத்துப்பரல்கள் கொண்டது' என்று கூறியவனாய் அரசன் அதனைக் கொண்டு வந்து முன்வைக்கச்

சொன்னான்.

கண்ணகி முன் சிலம்பினை வைக்க அதனை அவள் உடைக்க அதிலிருந்து பரல் ஒன்று தெறிக்க அது மன்னன் வாய் இதழில் பட்டது; மணி கண்டான்; அவ்வளவுதான், வாய்ச் சொற்கள் அடங்கி விட்டன. மனம் தளர்ந்தான்; அவன் செங்கோன்மை சீர்அழிந்தது; அவன் வெண் கொற்றக் குடை சாய்ந்தது.

'பொன் செய் கொல்லன் தன் சொல் கேட்ட யானோ அரசன்! யானே கள்வன்; என்னால் இம்மரபு மாசுபட்டது; கெடுக என் ஆயுள்' என்று கூறித் தன் உயிரை விட்டான். அவன் இன்றித் தான் வாழ முடியாது என்பதை உணர்ந்து அரசி நடுங்கியவளாய் அவன் இணையடி தொழுது வீழ்ந்தனள், அவளும் அவனோடு உயிர்விட்டாள்.