பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 வழக்குரை காதை

கண்ணகி கடுஞ்சினம்

"தீமை செய்தவரை அறக்கடவுள் வாட்டும் என்பது இப்பொழுது உண்மை யாயிற்று' என்று கூறியவளாய்க் கண்ணகி, "வடுவினைச் செய்தான் மன்னவன்; அவன் தேவி நீ! கடுவினை உடைய யான் இனிச் செய்வதைக் காண்பாயாக என்று கூறிய வண்ணம் வெளியேறினாள்.

9 y

'கண்ணகியின் கண்ணிரும், சிலம்போடு வந்த தோற்றமும், விரித்த கூந்தலும், உயிர்ப்பு அற்ற தோற்றமும் பாண்டியன் உயிரைச் செகுத்தன. கூடல் நகரத்து அரசன் இப்பொழுது வெறும் கூடாயினான்' என்று உலகம் பேசியது.

புழுதிபட்ட மேனியும், அழுத கண்ணிரும், விழுந்த கருங்கூந்தலும், ஏந்திய தனிச் சிலம்பும் கண்ட அளவில் அரசன் தன் வழக்கில் தோற்றான். அவள் சொல்லைக் கேட்ட அளவில் உயிரையும் தோற்றான். இரண்டு தோல்விகள் அடுக்கடுக்காக அவனை அடைந்தன.

21. கண்ணகியின் சூள் உரைகள் (வஞ்சின மாலை)

கண்ணகி சூளுரை

விழுந்து கிடந்த அரசமாதேவியை நோக்கி எழுச்சி பொங்கக் கண்ணகி சூள்உரைகள் கூறத் தொடங்கினாள். 'கோவேந்தன் தேவியே! கேள். தீயவினை என்னை ஆட்டி வைக்கின்றது; எதுவும் தெரியாது என்பதை ஒப்புக்கொள்கிறேன்; ஆனால் எனக்குத் தெரிந்ததைக் கூறுகிறேன்; முற்பகல் செய்யின் பிற்பகல் அதற்கு விளைவு உண்டு; இது உறுதி'.

சோழ நாட்டுப் பெருமை

'கற்புடைப் பெண்கள் பிறந்த காவிரிப்பூம் பட்டினத்தில் நான் பிறந்தேன்; அவர்கள் அற்புதச் செயல்களை அறிவிப்பேன்; கேட்பாயாக! வன்னி மரத்தையும், கோயில் மடைப்பள்ளியையும் சான்றாக வைத்து மணம் செய்து கொண்டாள் ஒருத்தி, அவளுக்கு மறுப்பு வந்த போது அவள்