பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 சிலப்பதிகாரம்

நால்வகைத் தேவரும் மூஅறு கணங்களும் பால்வகை தெரிந்த பகுதித் தோற்றத்து வேறுவேறு கடவுளர் சாறுசிறந் தொருபால்

அறவோர் பள்ளி அறவோர் பள்ளியும். அறண்ஓம் படையும், புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும், 180 திறவோர் உரைக்குஞ் செயல்சிறந்து ஒருபால்

சிறை வீடு கொடித்தேர் வேந்தனொடு கூடா மன்னர் அடித்தளை நீக்க அருள்சிறந்து ஒருபால்

விழவுக்களி

கண்ணு ளாளர், கருவிக் குயிலுவர். பண்ணியாழ்ப் புலவர், பாடற் பாணரொடு, I85 எண் அருஞ் சிறப்பின் இசைசிறந்து ஒருபால் முழவுக்கண் துயிலாது, முடுக்கரும், விதியும், விழவுக்களி சிறந்த வியலுள் ஆங்கண்

பொதிகைத் தென்றல் காதற் கொழுநனைப் பிரிந்துஅலர் எய்தா மாதர்க் கொடுங் குழை தண்னோடு 190 இல்வளர் முல்லை, மல்லிகை, மயிலை, தாழிக் குவளை, சூழ்செங் கழுநீர், பயில்பூங் கோதைப் பிணையலிற் பொலிந்து, காமக் களிமகிழ்வு எய்திக், காமர் பூம்பொதி நறுவிரைப் பொழில் ஆட்டு அமர்ந்து, 195 நாள்மகிழ் இருக்கை நாள் அங்காடியில் பூமலி கானத்துப் புதுமணம் புக்குப் புகையும் சாந்தும் புலராது சிறந்து, நகைஆடு ஆயத்து நன்மொழி திளைத்துக் குரல்வாய்ப் பாணரொடு, நகரப் பரத்தரொடு, 200 திரிதரு மரபின் கோவலன் போல,