பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 339

எரி நெருப்பு தெய்வ வடிவில் அவள் முன் வந்து நின்றது. நீலநிறமேனி, சிவந்தசடைமுடி, பால்போலும் வெண்பற்கள் உடைய பார்ப்பனனாக அவள் முன் வந்து தோன்றியது. பத்தினியாகிய கண்ணகி முன் நின்றது; 'இந்த நகர் எரியுண்ணும்; அதற்கு ஒரு சாபம் எற்கனவே உள்ளது. யாரை விட்டு வைப்பது?’ என்று கேட்டு நின்றது. -

'பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப்பெண்டிர், மூத்தோர், குழவி ஆகிய இவர்களை விட்டு விட்டுத் தீயவர்கள் பக்கமே போய்ச் சேர்க' என்று ஏவினாள். புகையோடு கூடிய நெருப்பு மதுரை மாநகரைச் சுற்றிக் கொண்டது; அது மூண்டு எழுந்து அழிக்கத் தொடங்கியது.

பற்றிய நெருப்பு அந்த நகரை அழித்தது; பாண்டியன், அவன் தன் உரிமை மகளிர், அவன் மாளிகை, வில்லேந்திய காவல் படைவீரர்கள், யானைகள் அனைத்தும் வெந்து ஒழிந்தன.

கற்பு இந்த அழிவினைச் செய்தது; காவல் தெய்வங்கள் அந்நகரை விட்டு வெளியேறிச் சென்றன; கற்பின் பொற்பு இவ்அற்புதத்தை விளைவித்தது.

22. தீக்கிரையான மதுரை (அழற்படு காதை)

நகரத்து அழிவு

ஏவல் இட்ட தெய்வமாகக் கண்ணகி விளங்கினாள். அவள் ஏவலைக் கேட்டு எரி நெருப்பு மதுரையைத் தீய்த்தது. காவல் தெய்வங்கள் நகர்க் கதவுகளை அடைத்து ஊர்மக்கள் வெளியேறாமல் அடைத்து வைத்து விட்டு அவர்களைக் காவாமல் அவை வெளியேறி விட்டன.

பாண்டியன் தனக்கு ஏற்பட்ட பழியைத் தன் உயிர் கொடுத்து மாற்றினான்; வளைந்த கோலைச் செங்கோல் ஆக்கினான்; அவன் மனைவியும் அதே அரசு கட்டிலில் உடன்கட்டை ஏறினாள். பெண்ணொருத்திக்கு இழைத்த