பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 அழற்படு காதை

கொடுமை அதன்ால் ஏற்பட்ட பழியை அவன் உயிர் கொடுத்துத் தீர்த்தான். நில மடந்தைக்கு இச் செய்தியை அறிவித்தான்.

அரசுகட்டிலில் இவ்விருவரும் துஞ்சியது அரசு அதிகாரி கள் அறிந்திலர். ஆசான். பெருங்கணி, அறக்களத்து அந்தணர், காதிப் பட்டம் பெற்ற உயர் அதிகாரிகள், அரசியல் செய்திகளை எழுதும் கணக்கர்கள், மற்றும் அரசு அதிகாரிகள், அந்தப்புர மகளிர் அனைவரும் ஒவியம் போல் உரை அவிந்து கிடந்தனர்.

குதிரை வீரர், யானைப்பாகர், தேர் ஊர்வோர், வாள் மறவர்கள் இவர்களும் செயலற்று நின்றனர்; அவர்களும் நெருப்பைக் கண்டு அஞ்சி அகன்றனர். .

இந்த நகரைக் காத்துவந்த பூதங்கள் நகரைவிட்டு நீங்கின; அந்தண பூதமாகிய ஆதிப்பூதம், அரச பூதம், வணிகப்பூதம், வேளாண் பூதம் இவை நான்கும் இனி அங்கு இருந்து பயனில்லை என்பதால் நீங்கிவிட்டன. கண்ணகியின் கடுஞ்சூள் இது. அதனைத் தடுக்க இயலாது என்பதை அவை உணர்ந்தன. சந்திக்கு ஒரு பூதம் என அந் நகரைக் காத்து வந்தன. அவை நீதிக்கு அடிபணிந்து நாட்டை விட்டு நீங்கின.

அந் நகரத்து வீதிகள் அனைத்தும் அழிந்தன; கூலமறுகு, கொடித்தேர்வீதி, சாதிகளின் பெயரால் பாகுபடுத்தப் பட்ட வீதிகள் இவை காண்டீபன் வில்லுக்கு எரிந்த காண்டவ வனம் போல் அழிந்தன. காண்டவ தகனம் என இம் மதுரை எரிந்து சாம்பலாயிற்று, நல்லோர் மட்டும் விதிவிலக்கு ஆயினர்; அறவோரை அழிக்காமல் மறவோரை மட்டும் மாய்த்தது.

கன்றுகளும், பசுக்களும், ஆயர்தம் தெருக்களை அடைந்தன. யானைகளும், குதிரைகளும் நகரின் மதிலுக்குப் புறமாகச் சென்று உயிர் தப்பின. மகளிர் காமக் களியாட்டம் செய்வதை விடுத்து உயிருக்குப் பாதுகாப்புத் தேடினர். தாயர்கள் தம் குழந்தைகளைத் தட்டி எழுப்பி முதிய பெண் டிருடன் தப்பி ஒதுங்கினர். அவர்களை நெருப்புத் தீண்ட வில்லை. .

பாராட்டுரை

அறம் வழுவாத கற்புடைய மாதர் அனலைக் கண்டு கலங்கவில்லை. 'கண்ணகி தீ மூட்டியது தவறு அல்ல' என்று பேசினர்; அவள் செய்கையை வாழ்த்தினர்.