பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342. கட்டுரை காதை

'நங்கையே! என் குறை கேட்பாயாக!' என்று அம் மங்கை விளித்துப் பேசினாள். வாட்டமுற்ற நங்கை கண்ணகி வலப்பக்கமாகத் திரும்பிக் "கோட்டமுற்றுக் கேட்ட நீ யார்? ஏன் என்பின் வருகிறாய்? என் துயரம் முழுதும் நீ அறிவாயோ!' என்று கேட்டாள்.

'துயரம் அறிந்தே உன்னைத் தொடர்கிறேன். மதுரைப் பெண் யான்; கட்டுரை கூற வந்திருக்கிறேன். உன் கணவனுக்காக இரங்குகின்றேன்; என் அரசனுக்கு வந்தது தீ விதி அது போல் உன் கணவனுக்கும் ஒரு தீ வினை வந்தது. இருவருக்கும் கேடுகள் நேர்ந்தன; அவர்கள் செய்த தீ வினைகளின் விளைவே இவை யாகும்.'

பொற்கைப்பாண்டியன்

'மறை ஒலி கேட்குமே யன்றி மணிநா அறை ஒலி இம் மதுரை நகரில் இதுவரை கேட்டது இல்லை. அடி தொழுது வணங்குவர் அல்லாமல், குடி பழித்துத் துாற்றுங் கொடுங்கோலனாகத் திகழ்ந்தது இல்லை. இளமை காரணமாகக் கட்டுக் கடங்காது மனத்தை அலையவிட்டவர் அல்லர் பாண்டியர்கள்; பாண்டி மன்னர்கள் தொடர்ந்து நன்மைகளைச் செய்து வந்தவர்கள் ஒழுக்க உயர்வு மிக்க குடி அது".

'பாண்டியர்கள் நெறி தவறாதவர்கள்; மனத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டு வாழ்ந்தவர்கள்; அத்தகைய மரபு அது',

"அவர்களுள் ஒருவன் தவறு செய்யச் சூழ்நிலை இடம் தந்தது. காவல் காக்கும் வேந்தன் ஆவல் காரணமாகக் கீரந்தை என்பானின் மனைவி உள்ளே தனித்து இருக்க அவ் வீட்டுக் கதவைத் தட்டிவிட்டான். நள்ளிரவு; காவல் செய்வது அரசன் கடமை; தவறி விட்டான்."

'பார்ப்பணி அவள் உள் இருந்து, மன்னவன் காவல் காக்கும்; கவலை கொள்ளாதே என்று கணவன் சொல்லிப் போன சொற்களை அவன் செவி சுடும் வண்ணம் வாய்விட்டுக் கூவிக் குரல் எழுப்பினாள்.'

'தான் செய்த தவறு உணர்ந்து மன்னன் தன் அவையில் தானே தனக்குத் தீர்ப்பு வழங்கிக் கொண்டான். அவையில் தன் கையை வெட்டிக் குறைத்துக் கொண்டான். பொற்கை ஒன்றைப்