பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 347

3. வஞ்சிக் காண்டம்

24. குன்றவர் குரவையாடுதல் (குன்றக் குரவை)

அருவி ஆடுதல்

குருவி ஒட்டினர் கிளிகளை விரட்டினர்; மலைக்குச் சென்று தங்கினர்; அருவி ஆடினர்; சுனை குடைந்தனர். அலை உற்று வந்தவர்கள் அவர்கள் வேங்கை மரத்து நறு நிழலில் கண்ணகியைக் கண்டனர். அவர்களுக்குக் கண்ணகி வள்ளி யாகிய தெய்வம் போலக் காட்சி அளித்தாள். மனம் நடுங்க முலையிழந்து வந்து நின்றாள். அவளைக் கண்டு 'நீவீர் யார்?' என்று கேட்டனர்.

அதைக் கேட்டு அவள் சினக்கவில்லை. 'மதுரையையும், அதன் மன்னனையும் தீ வினை வந்து அழித்தது. அந்தச் சுழற்சியில் கணவனை அங்கு இழந்து விட்ட தீவினை யாட்டி யான்' என்று கூறினாள். அவர்கள் அவளைக் கரங்கூப்பி வணங்கினர். அவ்வாறு அவள் நின்ற நிலையில் வானவர் மலர் மழை பொழிந்தவராய் அவர்கள் கண்டு நிற்கக் கண்ணகியை அழைத்துக் கொண்டு சென்றனர். கோவலனும் உடன் வந்திருந்தான். அவனோடு இவளும் சென்றாள். இவளைப் போல் மாபெருந் தெய்வம் நம் குலத்தில் இல்லை. இந்த மாநிலத்தில் இல்லை' என்று அறிவித்தனர்.

'சிறுகுடியிரே! சிறுகுடியிரே! இவளை வழிபடும் தெய்வமாகக் கொள்ளுங்கள். இவள் வேங்கை நறுநிழலில் நமக்குத் தெய்வமாகக் காட்சி அளித்து உள்ளாள். அதனால் இவளுக்கு வழிபாடு இயற்றுங்கள்; அனைவரும் ஒன்று கூடுவோம்' என்றனர்.

'தொண்டகப் பறையைத் தொடுங்கள்; சிறுபறை அறையுங்கள்; கொம்புகளை முழக்குங்கள்: மணி ஒலி ஒலிக்கச் செய்யுங்கள்; குறிஞ்சிப்பண் பாடுங்கள்; நறும் புகை காட்டுங்கள், பூ இட்டு வழிபாடு செய்யுங்கள்; அவள் புகழைப் பாடுங்கள்; பரவுதலைச் செய்யுங்கள்: பல்வகை மலர்களைத்