பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 355

'விற்பொறி பதித்த இமயத்தில் கற்கொண்டு வர எம் காவலன் கருதிட்டான். அவனை எதிர்த்துப் போரிட்டால் அதன் விளைவினைத் தாங்க நேரிடும்; திறை தந்து இறையைப் பணியீர் ஆயின் அவன் வெற்றி விளைவுகளைச் சிந்திப்பீராக; அவன் கடலில் சென்று கடம்பு எறிந்த வெற்றி, இமயத்தில் வில் பொறித்த வெற்றி இவற்றைக் கேட்டிருப்பீர் நீர் அடங்கி எதிர் கொண்டு வரவேற்று உதவுவீர் என்றால் உயிர் பிழைப்பீர்; எதிர்த்தால் உயிருக்கு அஞ்சித் துறவு கொண்டு ஒடநேரிடும்' என்று செய்தி தெரிவித்தனர்; "வாள் கண்டு வணங்கினால் வாழ முடியும்; இல்லை என்றால் தோள் துணை மறந்து துறவு கொள்ள நேரிடும்' என்று அறிவித்தனர். 'அரசன் வாழ்க’ என்று யானை மீது இருந்து முரசு அறைவித்தனர்.

26. கல்லைக் கொணர்தல் (கால்கோள் காதை)

பறை அறைந்தனர்; சிம்மாசனத்தில் செங்குட்டுவன் ஏறி அமர்ந்தனன்; ஆசான்; நிமித்திகன்; அமைச்சர்; படைத்தலைவர் கள் ஆகிய இவர்கள் அனைவரும் சேர்ந்து 'மன்னர் மன்னன் வாழ்க’ என்று ஏத்தினர்; அரசன் கூறுவதை முன்னிருந்து கேட்டனர்.

படைத் தலைவரை விளித்து வீரமொழி பேசினான்: 'இமயத்திலிருந்து வந்த தவசிகள் எமக்கு ஈங்கு உணர்த்திய அவச்சொல் கேட்டு அடங்கிவிட்டால் சோழரும் பாண்டியரும் என்னை இகழவும் கூடும்; பழிச்சொல் நிலைத்து நிற்கும்; அதைப் போக்க வடக்கே சென்று கல்லை அங்கு ஆரிய அரசர்கள் தலைமீது சுமத்திக் கொண்டு வராமல் என் வாள் வறிது மீளும் என்றால் பகைவர்களை எதிர்த்துப் போரிட்டு அவர்களை நடுங்க வைக்காமல் குடிமக்களை அவதிக்குள் ஆக்கும் கடையன் என்ற பழிச்சொல்லை யான் அடைவதாக” என்று வஞ்சினம்

கூறினான்.

அதனைக் கேட்ட அவையில் இருந்த கல்வி ஆசான் அரசனை நோக்கி 'அவர்கள் இகழ்ந்தது உன்னை அன்று; சோழ