பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 கால்கோள் காதை

ஒவர் எனப்பட்டவர் வாழ்த்தினர். அவர்களுக்கு மிக்க பரிசிலை நல்கினான். அதன்பின் சஞ்சயன் என்பான் நாடக மகளிருடனும், ஏனைய இசைக் கலைஞருடனும் அரசனைக் காண அங்கு வந்து சேர்ந்தான். அச்செய்தியை அறிவித்தனர். "அவனை வரவிடுக' என்று கூறி அழைப்பித்தான்.

சஞ்சயன் வருகை

சஞ்சயன் என்பவன் நூற்றுவர் கன்னர் அனுப்பிய தூதுவன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். தன்னுடன் தான் அழைத்து வந்த நாடகக் கலைஞர்களையும், இசை வல்லுநரையும், ஆடல் மகளிரையும் அறிமுகம் செய்து வைத்தான். பின்பு நூற்றுவர் கன்னர் சொல்லி அனுப்பிய செய்தியை முறைப்படி கூறினான். கடவுள் எழுத ஒரு கல் கொணரச் செல்வது ஆயின் அதனைத் தன் தலைவர்களாகிய நூற்றுவர் கன்னரே செய்து முடிப்பர் என்று அவர்கள் சொல்லி அனுப்பியதாகத் தெரிவித்தான்.

'தான் வடநாடு செல்வது கல்லைக் கொணர்வதற்கு மட்டுமன்று; கடுஞ் சொல்லைக் கூறிய கனகனையும் விசயனையும் களத்தில் சந்திப்பதற்கே' என்று கூறினான். பாலகுமரன் என்பானின் மக்கள் கனகன், விசயன் என்பார் இருவர் தம் நாவைக் காவாதவராகித் தமிழர்களின் ஆற்றலைக் குறைவுபடுத்திப் பேசினர். விருந்தினர் மத்தியில் இழிவுடன் பேசித் தம் வீரத்தை மிகைப்படுத்திக் கூறினர். 'இமயத்தில் தமிழரசர்கள் புலியையும், கயலையும் பொறித்த நாட்களில் தாம் அங்கு இல்லை' என்றும், 'இருந்திருந்தால் அவர்களைத் தடுத்து நிறுத்தி இருக்க முடியும்' என்றும் நா காக்காமல் நகையாடிப் பேசினர். இச்செய்தியைச் சேரன் எடுத்துச் சொல்லி அவர்களுக்குத் தக்க பாடம் கற்பிக்கவே தான் செல்வதாகக் கூறினான்.

கங்கையைக் கடக்க வங்கங்கள் தேவை என்ற செய்தியைச் செப்பி அனுப்பினான். கன்னரைக் கொண்டு படகுகளை அனுப்பச் சொல்லி அறிவிப்புச் செய்தான். அரசன் இட்ட ஆணையைத் தாங்கி நூற்றுவர் கன்னரிடம் அதை நுவலச்