பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 நீர்ப்படைக் காதை

வெறுத்துப் புத்த பள்ளியை அடைந்து துறவியாயினான். அவன் மனைவி உறவுக்கு என ஒருவரும் இல்லாமையால் உயிர் விடுவதைத் தவிர வேறு வழி அறியாதவள் ஆயினாள். மாநாய்கன் தானம் பல செய்து அருக தானத்தை அடைந்து அறங்கள் செய்வதை வாழ்வாகக் கொண்டான். அவன் மனைவி, மகளையும், மருமகனையும் இழந்த துக்கம் தாங்க இயலாமல் ஏங்கி உயிர்விட்டு மறைந்தாள்.

மற்று இச்செய்திகளைக் கேட்ட மாதவி, "என் மகள் இனி நல்வாழ்க்கையை நாடிச் செல்லட்டும்; என்னோடு இந்தப் பழைய வாழ்க்கை மாறுவதாக; என் மகளைக் கணிகையாகக் கணமும் இசையேன். கணிகை வாழ்க்கை அவளைவிட்டு ஒழிக’ என்று கூறி அவளைப் புதிய நெறிக்குத் திருப்பிவிட்டாள். தானும் துறவியாவதற்கு உறுதி கொண்டு தலைமுடியை அடியோடு களைந்து புத்த பள்ளியை அவள் அடைந்து துறவறம் மேற்கொண்டுவிட்டாள். இந்தச் செய்திகளை எல்லாம் எடுத்துக் கூறிய மாடலன் இப் பின் நிகழ்வுகளுக்கு எல்லாம் தானும் ஒரு காரணமாக இருந்ததற்கு வருத்தம் தெரிவித்தான். இப் பாவத்தைப் போக்கிக் கொள்வதற்கே கங்கையில் நீராடத் தான் அங்கு வந்ததாகத் தெரிவித்தான்.

பாண்டிய நாடு

'செழியன் மறைந்தபின் பாண்டிய நாடு அதன் நிலை யாது?’ என்று சேரன் கேட்டான்.

"கொற்கையில் இருந்த வெற்றிவேல் செழியன் என்பான் கொல்லர் ஆயிரவரைக் கண்ணகி கோயில் முன் தலை கொய்து பலியிட்டுக் கொன்று தென்னவன் செய்த குற்றத்திற்கு ஈடு செய்தான். இச்செய்தி ஊர் எங்கும் பரவியது; மெல்ல மெல்ல நாட்டில் அமைதி திரும்பியது. செழியன் அரியாசனம் ஏறினான். நாடு சீர்பெற்றது' என்ற செய்தியை அறிவித்தான்.

அந்தி நேரம் அணுகியது; வானத்தில் பிறை தோன்றி இரவு வருதலைக் காட்டியது; அதன் வண்ண அழகில் அரசன் எண்ணம் செலுத்தினான். அவன் மனம் அமைதி பெற்று இருந்தது. அருகில் இருந்த காலக் கணிதன் ஞாலம் ஆள்வோனை