பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடலாடு காதை

35

ஐவகை மன்றத்து அமைதியும் காண்குதும்: நாரதன் வீணை நயம்தெரி பாடலும், தோரிய மடந்தை வாரப் பாடலும். ஆயிரம் கண்ணோண் செவியகம் நிறைய நாடகம் உருப்பசி நல்காள் ஆகி. மங்கலம் இழப்ப வீணை, மண்மிசைத் தங்குக இவள் எனச் சாபம் பெற்ற, மங்கை மாதவி வழிமுதல் தோன்றிய. அங்கு அரவு அல்குல் ஆடலும் காண் குதும்: துவர் இதழ்ச் செவ்வாய்த் துடி.இடை யோயே! அமரர் தலைவனை வணங்குதும் யாம்' எனச்

மகிழ் விழாக்கள் சிமையத்து இமையமும், செழுநீர்க் கங்கையும், உஞ்சை.அம் பதியும், விஞ்சத்து அடவியும், வேங்கட மலையும், தாங்கா விளையுள் காவிரி நாடும் காட்டிப் பின்னர்ப் பூவிரிபடப்பைப் புகார்மருங்கு எய்திச் சொல்லிய முறைமையின் தொழுதனண் காட்டி, மல்லல் மூதுார் மகிழ்விழாக் காண்போன்

மாதவியின் ஆடல்கள் மாயோன் பாணியும், வருணப் பூதர் நால்வகைப் பாணியும், நலம்பெறு கொள்கை வான்.ஊர் மதியமும் பாடிப், பின்னர்ச் சீர் இயல் பொலிய, நீர் அல நீங்கப் பாரதி ஆடிய பாரதி அரங்கத்துத், திரிபுரம் எரியத் தேவர் வேண்ட, எரிமுகப் பேர் அம்பு ஏவல் கேட்ப, உமையவள் ஒருதிறன் ஆக ஓங்கிய இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும் தேர் முண் நின்ற திசைமுகன் காணப்,

2 ()

25

30

35

40