பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 நீர்ப்படைக் காதை

நலத்தைத் துய்ப்பது ஆகுக' எனவும் பாடினர். அவன் தும்பை சூடி வெற்றியுடன் வந்ததை விளம்பிப் புகழ்ந்தனர். 'அவன் சூடிய பனம் பூவையும், தும்பைப் பூவையும், வஞ்சி மாலையையும் பாடுவோமாக!' என்று ஏத்திச் சிறப்பித்தனர். இந்நிலையில் நெய்தல் பண்ணைப் பாடிய நல்லிள நங்கையர் பாடலைக் கேட்டு அரசி மகிழ்வு பெற்றாள்.

அஞ்சொற் கிளவியர் பாடிய நால் நில இசைப் பாடல்களைக் கேட்டு மன்னவன் வருகையை அறிந்து வஞ்சிநாட்டு அரசி உடல் பூரித்தாள். வளையல்கள் செறிவு பெற்றன. வலம்புரிச் சங்குகள் முழங்கின. மாலைகள் வேயப் பெற்ற குடைக்கீழ் சேரன் யானை மீது அமர்ந்து வந்தான். அவனோடு பல யானைகள் வரிசையாகப் பின் தொடர்ந்தன. அரசனை நகர மாந்தர் எதிர் கொண்டு வரவேற்றனர். வஞ்சி மாநகருள் செங்குட்டுவன் வந்து சேர்ந்தான்.

28. கண்ணகிக்குப் படிமை நிறுவுதல் (நடுகற் காதை)

மகிழ்வும் மன நிறைவும்

'சேரன் வாழ்க" என்று சேயிழை மகளிர் வாழ்த்துக் கூறினர். மாலை வேளை, அவர்கள் வீடுகளில் விளக்கேற்றி ஒளி கூட்டினர். மலர்களைத் தூவி மங்கலம் ஆக்கினர்.

களம் கண்ட வீரர்கள் வீடு திரும்பினர். அவர்கள் உளம் மகிழ அவர்கள் காதலியர் அவர்களைத் தழுவி அவர்கள் மார்பில் ஏற்பட்ட தழும்புகளை ஆற்றினர் யானைக் கோடும் வேலும், அம்பும், வாளும் பட்ட வடுக்களை அவர்கள் மார்பு அணைப்பில் ஆறவைத்தனர். காதல் மகளிர் கடைக்கண் பார்வை அவர்களுக்குப் பரிசாக அமைந்தது. வீரம் நிறைந்த அவர்கள் ஈரம் மிக்க காதலில் திளைத்தனர்.

காதலிய்ர் கண் பார்வை அதன் நினைவுகள் போர்க் களத்தில் வீரர்களை வாட்டி வதைத்தன; அப்பொழுது அவை நோயை விளைவித்தன. இப்பொழுது அப்பார்வை நோய்