பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 நடுகற் காதை

மற்றும் பாண்டியன் அவைக்குச் சென்றபோது அவனும் அதேபோன்று கூறிச் 'சிவனை வணங்கச் சிந்தை கொண்ட எளியவர்களை இழுத்துக் கொண்டு வந்தது சேரனுக்கு இழுக்கு” என்று உரைத்ததாக அறிவித்தனர். மன்னர் இருவரும் மதிக்காமல் உரைத்த மாற்றங்களை நீலன் என்பவன் எடுத்து உரைக்கக் காலன் போல் கடுஞ்சினம் கொண்டு ஞாலம் ஆள்வோன் ஆகிய செங்குட்டுவன் சீறி எழுந்தான்; அவன் தாமரை போன்ற கண்கள் தழல் நிறம் கொண்டன; எள்ளி நகையாடித் தம் ஆற்றலை மதிக்காமல் அவர்கள் தன்னைத் தூற்றி விட்டதாகக் கருதினான். நன்றி மறந்தவர்கள் என்று வென்றிக் களிப்பில் அவர்கள் செயலைக் கண்டித்தான்; அவர்கள் உறவைத் துண்டித்தான்.

மாடலன் அறிவுரை

'மாடலன் எழுந்தான்; மன்னவர் மன்ன! வாழ்க நின் என்று தொடங்கி அவன் சீற்றத்தை ஆற்றுவிக்கத் தொடங்கினான்.

9 y !

கொற்றம்

ஆட்சி ஏற்று ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன; எனினும் நீ அறச் செயலைக் கருதாது மறக்களமே கருதுகின்றாய்; காயம் இது பொய், யாருமே உலகில் நிலைத்து வாழ்ந்தது இல்லை. எண்ணிப்பார்; புகழ்மிக்க உன் முன்னோர் மகிழ்வு மிக்க செயல்களைச் செய்து முடித்தனர்; வீரம் விளைவித்தனர், கடம்பு எறிந்து கடலில் பகைவர்களை வென்றனர்; இமயத்தில் வில் பொறித்தனர்; வேள்விகள் இயற்றி வேத வேதியர்களுக்கு நன்மைகள் செய்து நற்புகழ் பெற்றனர்; கூற்றுவனும் அஞ்சும் ஏற்றம் மிக்க வாழ்வு வாழ்ந்து காட்டினர்; யவனர்களை வென்று புவனத்தை ஒரு குடைக் கீழ் ஆண்டனர்; இமயம் வரை வென்று தம் வெற்றிக் கொடியை நாட்டினர்; பகைவர்களை அவர்தம் மதிலை அடைந்து அவற்றை அழித்து அவர்களை வென்று அடிமைப்படுத்தினர் அயிரை மலையினை அடைந்து அதனையும் கடந்து ஆழ்கடலில் மூழ்கிப் புண்ணியம் தேடினர்; நகர்க் காவலுக்குச் சதுக்க பூதங்களைக் கொண்டு வந்து நிறுவி அவற்றின் ஏவலுக்கு அடிபணிந்து மதுக்குடம் கொண்டு வந்து கொட்டி நிரப்பி யாகங்கள் செய்தனர். புகழ்மிக்கு வாழ்ந்தவர் அவர்கள் பூத உடல் இன்று அபூத நிலை எய்திவிட்டது; வாழ்ந்த