பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 371

சுவடுகள் மறைந்துவிட்டன; யாக்கை நிலையற்றது என்பதை இவர்கள் வாழ்க்கை வரலாறுகள் காட்டுகின்றன”.

'செல்வம் நிலைக்காது என்பதனை நீயே நேரில் கண்டிருக்கிறாய்; செருக் களத்தில் உன்னிடம் தோற்றவர்கள் இன்று தெருத் தெருவாக வறியவராகத் திரிகின்றனர். செல்வம் நிலைத்து நிற்காது; அதுமாறி மாறிச் செல்லும் என்பது நீ நேரில் கண்டிருக்கிறாய்'.

'இளமை நிலையாது என்பதனை உன் தளர்ச்சிமிக்க வயதே காட்டிவிடும். நரைமுதிர் யாக்கையை நீ கண்டுவிட்டாய்; அடுத்தது? சிந்தித்துப்பார்; பிறவிகள் தொடர்கின்றன. அவையும் இன்ன பிறவி என்று உறுதி கூறும் நிலையில் இல்லை. தேவர்கள் மனிதராகப் பிறக்கின்றனர்; மனிதர்கள் விலங்காகின்றனர்; விலங்குகள் நரகர் கதியை அடைகின்றன; ஆடும் கூத்தர் போல் வேறு வேறு வடிவு கொள்கின்றது இந்த உயிர் உயிர் வாழ்க்கை நிலையற்றது; பிறப்புகளும் மாறி மாறி வருகின்றன; அவரவர் செய்யும் வினைகட்கு ஏற்ப உயிர்கள் பிறப்புகளை ஏற்கின்றன. யாக்கை நிலைத்து இருப்பது அன்று; செல்வம் இடம் பெயர்வது; இளமை அதுவும் மாறுவது; நிலையற்ற வாழ்க்கையில் எதுவும் நிலைத்து நிற்காது” என்ற” விளக்கம் தந்தான். அடுத்து அவன் செய்யத் தகுவது எது என்று எடுத்துக் கூறத் தொடங்கினான்.

அதற்கு முன்னுரையாகத் தன் நிலை யாது என்று விளக்கினான். பரிசில் பெறுவதற்காக இதைத் தான் கூறவில்லை என்று முன்னுரை தந்தான். 'நீ மற்றவர்களைப் போல் உருத் தெரியாமல் மறைவதை நான் விரும்பவில்லை. பிறந்தவர் இறப்பது பொது நெறி; அவர்களுள் சிலர் வீடுபேறு அடைவது சிறப்பு நெறி; நீ மற்றவர்களைப் போல வாழ்ந்து முடிவதை யான் விரும்பவில்லை; வீட்டுநெறி அடைவது நீ ஈட்டும் செயலாக அமைய வேண்டும்' என்று வழிகாட்டினான்.

'வேள்வி செய்வதே வீட்டு நெறிக்கு வழி கோலுவதாகும்; வேள்வி அறிந்த மறையவர் முன் இருந்து நடத்தும் பெரு வேள்வியை நீ தொடங்க வேண்டும். அதனை இன்றே செய்தல்