பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 373

செய்தான். இப்பணியினை அழும்பில் வேள் என்னும் அமைச்சனிடம் ஒப்புவித்தான்.

கோட்டம் அமைத்தல்

அதன் பின் கண்ணகிக்குக் கோட்டம் அமைத்தான்; கண்ணகி வாழ்வு மூன்று பேருண்மைகளை விளக்கிக் காட்டியது. அவள் கற்பின் பெருமைக்குக் காரணம் அவள் வளர்ப்பு முறை; அவள் பிறந்த நாட்டின் பின்புலம்; கற்பு சிறப்பதற்கு அரசு நன்கு அமைந்து இருந்தது; கண்ணகி தன் கற்பின் திறத்தால் சோழ அரசன் நல்லாட்சியை உலகுக்கு அறிவிக்க இயன்றது; இது ஒன்று.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆகும் என்ற பேருண்மையைப் பாண்டிய நாட்டில் உலகுக்கு உணர்த்தி னாள். அவனுக்குப் பெருமை சேர்த்தாள். அவன் தவறு உணர்ந்து உயிர்விட்டான். அவன் புகழுக்கு உரியவன் ஆயினான்; அவன் மானத்தைத் துண்டிவிட்டு அவனை மாண்புறச் செய்தாள். கண்ணகியின் செயல் நீதியை நிலைநாட்ட உதவியது; பாண்டியனுக்குப் பெருமை தேடித் தந்தது; அதனால் பாண்டிய நாடு பெருமை பெற்றது.

அடுத்தது சேர நாட்டை அடைந்து அரிய செயலைச் செய்ய அவள் துண்டியவள் ஆயினாள்; வஞ்சினம் கொண்டு வாள் ஏந்திய மன்னன் வெஞ்சினத்தால் வடவரை எதிர்த்துத் தன் புகழை நிலை நாட்டி வீரச் செயல் முடித்தான்; சேர அரசனின் மானம் மிக்க செயலைத் துண்டி அவன் வீரச் சிறப்பை உலகறியச் செய்தவளும் கண்ணகி ஆவாள். எனவே கண்ணகி தமிழகத்துக்குப் பெருமை தேடித் தந்தவள் ஆயினாள் என்று அவள் பெருமையைச் சேரன் பாராட்டினான்.

மதுரை மூதுரை எரியழலுக்கு இரையாக்கினாள்; சீற்றம் கொண்டு மதுரையை அழித்துவிட்டுச் சேர நாடு சேர்ந்த நங்கை அவள் போற்றுதற்கு உரியவள் என்று பேசிச் சிறப்பித்தான்.

அவளுக்குச் சிற்ப நூல் வல்லவரைக் கொண்டு கோயில் கட்டுவித்தான். சோதிடர்களைக் கொண்டு நாள் நியமித்தான்;