பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 நடுகற் காதை

அந்தணர்களைக் கொண்டு சடங்குகள் இயற்றிப் பத்தினிக் கோயில் அமைத்து முடித்தான். அதனை அடுத்துக் கண்ணகியின் படிமத்தை நிறுவி வழிபாடுகள் செய்ய ஏற்பாடுகள் செய்வித்தான்.

வழிபாடுகள்

இமயத்தின் உச்சியில் உள்ள தெய்வமாகிய சிவனை வழிபட்டுப் பின் விழா எடுத்தான். தெய்வப் படிமத்துக்குப் பொன்னணி பூட்டினான். பூக்களைத் தூவி வழிபாடு செய் வித்தான். காவல் தெய்வங்களைக் கோயில் கடைவாயிலில் நிறுத்தினான். இதற்குக் காப்புக் கட்டுதல்' என்று கூறுவர். இது தொடக்க நிகழ்ச்சியாக அமைந்தது. அதன்பின் வேள்விகளும், விழாக்களும் நாள்தொறும் நடைபெற வழிவகைகளை வகுத்தான். 'தெய்வ வழிபாடு தொடர்ந்து செய்வீராக” என்று செங்குட்டுவன் அறிவுறுத்தினான். பத்தினிச் சிலையை அங்கே நிறுவி அதனைக் கடவுளாக ஏற்றுப் போற்றி விழாக்கள் நடத்தினான். கோயிலில் கண்ணகி சிலை இடம் பெற்றது. கல்லை நிறுவிக் கடவுள் ஆக்கிக் கோயில் தெய்வமாகக் கண்ணகியை நிறுத்தினான்.

29. தேவந்தியும் பிறரும் வருதல் (வாழ்த்துக் காதை)

தேவந்தி வருகை

கண்ணகியின் விழாவில் அவள் தோழியாகிய தேவந்தி வந்து கலந்து கொண்டாள். அவளுடன் கண்ணகியை வளர்த்த காவற் பெண்டும், அவள் மகளும் வந்திருந்தனர். மதுரையில் இருந்து இவர்களுடன் மாதரி மகள் ஐயையும் வந்து சேர்ந்தனள், அவரவர் தம் உறவினை உரைத்து அவர்கள் ஒவ்வொருவரும் செய்திகளை விளம்பினர். -

தேவந்தி சோழ நாட்டில் கண்ணகியின் தாயும், கோவலன் தாயும் உயிர் துறந்தமையைச் செப்பினாள். காவற் பெண்டு