பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 375

ஆகிய செவிலித்தாய் மாசாத்துவான் துறவைப் பற்றியும், மாநாய்கன் துறவைப்பற்றியும் உரைத்தாள். செவிலியின் மகள் ஆகிய அடித்தோழி மாதவியும் மணிமேகலையும் துறவிகள் ஆயினமையைச் செப்பினாள்.

மற்றும் தேவந்தி ஐயையைச் சுட்டிக் காட்டி அவள் மணம் பெற்றில்லாத அவலத்தைக் கூறினாள். கண்ணகியின் வீழ்ச்சி யால் மற்றவர்கள் அடைந்த தாழ்ச்சிகளை இவர்கள் எடுத்துச் சொல்லி ஆற்றினர்; தான் உடன் பழகிய இப்பண்டையோர் அங்கு வந்து மண்டியவராய்ச் சோகக் கதைகளைச் சொல்லி அழுதனர்; வாய்விட்டு அரற்றினர்.

தெய்வக் காட்சி

கண்ணகி தெய்வக் காட்சி நல்கி வானத்தில் இருந்து தோற்றம் அளித்தாள். பொன் ஒளிர் மேனியளாக மின்னல் போல் அவர்களுக்கு வானத்தில் காட்சி அளித்தாள். அதனைக் கண்டு சேரன் செங்குட்டுவன் பெருவியப்பு அடைந்தான். 'என்னே இஃது, மின்னல் கொடிபோன்று ஒரு காட்சி தோற்றுகிறதே' என்று வியந்தான். பொற் சிலம்பும், மேகலையும், வளையல்களும், வயிரப் பொன் தோடும் அணிந்த பெண் உரு அவனுக்குக் காட்சி அளித்தது.

கடவுள் நிலை அடைந்த கண்ணகி புதிய வார்த்தைகள் பேசினாள். மானிட நிலையில் இருந்தவள் பாண்டியனைத் "தேரா மன்னன்' என்று சாடியவள் மனம் மாறி 'அவன் தீதிலன்' என்றாள்; அதுமட்டுமன்று. 'நான் அவன் தன் மகள்' என்று உறவும் கொண்டு அவனை மதித்துப் பேசினாள். மானிடப் பார்வை வேறு; கடவுள் நிலைவேறு என்பதைக் காட்டினாள். தவறுகளை மன்னிப்பதுதான் தெய்வநிலை என்பதை உணர்த்தினாள்.

'தென்னவன் திதிலன்; தேவர் உலகில் அவன் வரவேற்கப்பட்டுள்ளான்; அவர்கட்கு நல்விருந்து ஆயினான்; யான் அவன் மகளாகிவிட்டேன். முருகனின் குன்று ஆகிய இந் நெடுவேள் குன்றில் வந்து விளையாடுவேன்; இதனை விட்டு அகலமாட்டேன்; என்னோடு தோழியர்களே வந்து கலந்து கொள்ளுங்கள்; அனைவரும் வருக' என்று அழைத்தாள்.