பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iலப்பதிகாரம்

3

8

பாரதி ஆடிய வியண் பாண்டரங்கமும் 45 கஞ்சண் வஞ்சம் கடத்தற் காக அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள் அல்லியத் தொகுதியும், அவுணற் கடந்த மல்லின் ஆடலும், மாக்கடல் நடுவண் நீர்த்திரை அரங்கத்து, நிகர்த்துமுண் நின்ற 50 சூர்த்திறம் கடந்தோன் ஆடிய துடியும், படைவீழ்த்து. அவுணர் பையுள் எய்தக் குடைவீழ்த்து அவர்முன் ஆடிய குடையும் வாணன் பேர்ஊர் மறுகிடை நடந்து, நீள்நிலம் அளந்தோன் ஆடிய குடமும் 55 ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக் காமன் ஆடிய பேடி ஆடலும் காய்சின அவுணர் கடுந்தொழில் பொறாஅள், மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும் செருவெங் கோலம் அவுணர் நீங்கத், 60 திருவின் செய்யோள் ஆடிய பாவையும் வயலுழை நின்று, வடக்கு வாயிலுள், அயிராணி மடந்தை ஆடிய கடையமும் அவரவர் அணியுடன், அவரவர் கொள்கையின், நிலையும் படிதமும், நீங்கா மரபின், 65 பதினோர் ஆடலும், பாட்டின் பகுதியும், விதிமாண் கொள்கையின் விளங்கக் காணாய் ! தாது அவிழ் பூம்பொழில் இருந்து யான் கூறிய மாதவி மரபிண் மாதவி இவள் எனக் காதலிக்கு உரைத்துக் கண்டு மகிழ்வு எய்திய 70 மேதகு சிறப்பின் விஞ்சையண் அன்றியும், அந்தரத் துள்ளோர், அறியா மரபின் வந்து காண்குறுTஉம் வானவன் விழவும் ஆடலும், கோலமும், அணியும் கடைக்கொள.