பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 வரந்தரு காதை

30. வரம் தருதல் (வரந்தரு காதை)

செங்குட்டுவன் வினவுதல்

வடதிசை மன்னர்களை வணங்கச் செய்த சேரன் செங்குட்டுவன் கண்ணகியின் தெய்வக் காட்சியைக் கண்டுகளி மகிழ்வு கொண்டான். அதன்பின் தேவந்தியை நோக்கி மணிமேகலை பற்றிய செய்திகளைக் கூறுமாறு பணித்தான். அடித்தோழி, 'மணிமேகலை துறவு பூண்டாள்' என்ற செய்தியை அவள் அரறறி வாய்விட்டுக் கூறியிருந்தாள்; அதை மனத்தில் கொண்டு சேரன் தேவந்தியை ந்ோக்கி அவள் கூறியதாகவே கொண்டு விளக்கத்தைக் கேட்டான். அதனை அங்குள்ளவர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது அவன் நோக்கமாக இருந்தது.

மணிமேகலை துறவு

தேவந்தி இச்செய்தியைக் கூறலுற்றாள். 'மாதவி மனநிலை மாறிவிட்டது; அவள் துறவு நிலையை ஏற்று விட்டாள். அந்த நிலையில் அவள் தன் மகளைப் பற்றி என்ன கருதுகின்றாள் என்பதைத் தெரிந்து கொள்ள அவள் தாய் சித்திராபதி விரும்பினாள். பருவம் அடைந்த மங்கை உருவத்தில் கவர்ச்சி மிக்கவள் ஆயினாள். இளைஞர்கள் அவள் பேரழகில் மயங்கிக் கிடந்தனர். அவளைக் கலை உலகில் காண நாடே எதிர்பார்த்து நின்றது. சித்திராபதி அவளை மேடையில் ஆடவைக்க விரும்பினாள். இந்திர விழாவில் கற்றுத் துறை போகிய அந்நங்கை வந்து ஆடுவாள் என்று எதிர்பார்த்தனர்; நாட்டிய ஆசான் காத்துக் கிடந்தான். மணிமேகலையின் அடுத்த நிலை யாது? அவள் கோட்பாடு யாது? என்று சித்திராபதி தொடுத்த வினாவுக்கு அவள் தந்த விடை யாருமே எதிர் பார்க்கவில்லை. தன்மகளை 'வருக' என்று அழைத்தாள். 'தருக" என்று கூறி அவள் கூந்தலைக் களைந்தாள். அவளை அழகு குறைந்தவளாக ஆக்கிப் புத்த மடத்தில் சேர்த்தாள். 'அழகு அவளை விட்டு அகன்றது. கலைவாழ்வு கலைக்கப் பட்டது. இது அவள் நிலை' என்று தேவந்தி கூறி விவரித்தாள்.