பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 379

'இது நாட்டுக்கே பேரிழப்பு ஆகியது; அரசனும் நகரத்து மக்களும் மாணிக்க மணியைக் கடலில் வீழ்த்திவிட்டவர் போன்று கலக்கம் அடைந்தனர். மாணிக்க ஒளி மங்கிவிட்டது. கலைச் செல்வத்தை இழந்த நிலையில் நாடே துன்பத்துள் ஆழ்ந்துவிட்டது” என்று மேலும் விளக்கினாள்.

'இளமங்கை அவள் தன் எதிர்காலத்தை இழந்தாள். அது பேரிடி யாகியது. அதனால்தான் அடித்தோழி அரற்றினாள். நானும் வருந்தினேன்” என்று கூறித் தன் நிலையையும் எடுத்து உரைத்தாள்.

தேவந்தி வரலாறு

அவ்வாறு கூறிய பின் தேவந்தி தன் சுய உணர்வு இழந்து தெய்வம் உற்றவளாகி ஆவேசம் கொண்டு உரையாடினாள். அவள் மேல் பாசாண்டச் சாத்தன் குடிகொண்டு அவளை ஆட்டுவித்தான். அவன் தேவந்தி மூலமாக வந்து பேசினான்.

அங்கே குழுமி இருந்தவர்களுள் அரட்டன் செட்டி என்பானின் இரட்டைப் பெண்கள் இருவரைச் சுட்டிக் காட்டினாள்; மற்றும் ஆடக மாடத்தில் அறிதுயில் அமர்ந்த திருமாலின் திருக்கோயில் அர்ச்சகன் மகள் ஒருத்தி இருந்தாள். அவளையும் தேவந்தி சுட்டிக்காட்டி இவர்கள் மீது மாடலன் கைக் கமண்டத்தில் உள்ள சுனை நீரைத் தெளித்தால் அவர்கள் தம் பண்டைப் பிறப்பு மன நிலையைப் பெறுவர் என்று

அறிவித்தாள்.

அந்தச் சுனைநீர் பாசாண்டச் சாத்தன் மாடலனுக்குத் தந்திருந்தான். மங்கலா தேவியின் கோயில் அருகில் மலை உச்சியில் ஒரு சுனை உள்ளது. அதில் நீராடுவோர் பண்டைப் பிறப்பு அறிகுவர். அந்தச் சுனை நீரை மாடல மறையவனுக்குத் தந்திருந்தான். அதனை அவன் தன் கமண்டலத்தில் வைத்திருந்தான். அதனைச் சுட்டிக் காட்டி இம்மூவர் மீதும் தெளிக்குமாறு தெய்வ முற்றிருந்த தேவந்தி கூறினாள். அவள் மீது பாசாண்டச் சாத்தன் இருந்து இவ்வாறு கூற அதனை ஏற்று மாடலன் தன் கமண்டல நீரை அம்மூவர் மீதும் தெளித்தான்.

அரசனுக்கு இச்செய்தி வியப்பு அளித்தது. அவனுக்கு விளக்கம் தர மாடலன் தேவந்தியின் வரலாற்றைக் கூறினான்.