பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 383

வஞ்சி மூதூரில் அரச மண்டபத்திடை இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் வீற்றிருக்க அங்கு அவன் தாள் நிழலில் இளங்கோ இருந்தார். அவரைப் பார்த்து அங்கிருந்த நிமித்திகன் ஒருவன், 'அரசு வீற்றிருக்கும் திருப்பொறி உண்டு உனக்கு' என்று விளம்ப அவனைக் கோபித்து நோக்கினார் இளங்கோ. செங்குட்டுவன் மூத்தவன். ஆட்சி அவனுக்குத் தான் வரவேண்டும். அதற்கு மாறாக அவன் கூறிவிட்டான். அவன் கூற்றைப் பொய்யாக்குவதற்காகவும், சேரனின் சோர்வைப் போக்குவதற்காகவும் துறவு பூண்டு குணவாயிற் கோட்டத்தில் மற்றவர்கள் எண்ணிப் பார்க்க இயலாத அளவற்ற பேரின்ப நிலை அடையும் பாதையில் சென்றுவிட்டார். சிந்தை செல்லாச் சேண் நெடுந்துரத்து அந்தமில் இன்பத்து அரசு ஆள் வேந்தன் ஆகிவிட்டதாகக் கூறினாள்; நாட்டுக்கு அரசனாக ஆகாமல் பாட்டுக்கு வேந்தனாக மாறினார். உலகு ஆள் கவிவேந்தனாக ஆயினார். இந்தச் செய்தியையும் அந்தக் கடவுள்பத்தினி எடுத்து உரைக்கக் கண்ணகி கதை முடிவு பெறுகிறது.

அறவுரைகள்

இந்தக் கதையைக் கேட்டவர்கள் அறவழியில் வாழ்ந்து நல்வாழ்வு வாழ வேண்டும் என்று இளங்கோவடிகள் காப்பியத்தை முடிக்கிறார். அந்த நீதிகள் பின்வருமாறு :

'இடுக்கண் வருங்கால் நடுக்கம் அடையாதீர்; தெய்வத்தைப் போற்றுவீர்; ஞானிகளை மதிப்பீர்; பொய்பேசுவதைத் தவிர்ப்பீர் புறம்

கூறுதல் ஒழிப்பீர்; ஊன் உணவு ஒழிப்பீர்; உயிர்க் கொலை செய்யற்க; தானம்பல செய்க, தவம்பல ஏற்க; செய்ந் நன்றி மறவாதீர், தீயார் நட்பு இகழ்க; பொய்ச்சான்று கூறாதீர்; மெய்ம்மை விட்டு

அகலாதீர்; அறவோரை அணுகுக; பிறவோரை விலக்குக; பிறன் மனைவியை நயக்காதீர்; உயிர்களுக்கு ஊறு

செய்யாதீர்;

இல்லற வாழ்வு இனியது; ஒழுக்கம் ஒம்புக;