பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 சிலப்பதிகாரம்

புலவுமீண் வெள்உணங்கல் புள்ஒப்பிக் கண்டார்க்கு அலவநோய் செய்யும் அணங்குஇதுவோ காணிர் அணங்கு இதுவோ காணiர் அடும்புஅமர் தண்காணல் பிணங்கு நேர் ஐம்பால் ஓர் பெண்கொண்டதுவே 13

தலைவன் பாங்கனுக்கு உரைத்தல் பொழில்தரு நறுமலரே, புதுமணம் விரிமணலே பழுதுஅறு திருமொழியே, பணைஇள வனமுலையே, முழுமதி புரைமுகமே, முரிபுரு வில்இணையே, எழுது அரு மின் இடையே எனை இடர் செய்தவையே 14

திரைவிரி தருதுறையே, திருமணல் விரி இடமே, விரைவிரி நறுமலரே, மிடைதரு பொழில் இடமே,

மருவிரி புரிகுழலே, மதிபுரை திருமுகமே, இருகயல் இணைவிழியே எனை இடர் செய்தவையே 15

வளைவளர் தருதுறையே, மணம்விரி தருபொழிலே, தளை அவிழ் நறுமலரே, தனியவள் திரிஇடமே, முளைவளர் இளநகையே, முழுமதி புரைமுகமே இளையவள் இணைமுலையே எனை இடர் செய்தவையே 16 முன்னிலை கிளத்தல் கடல்புக்கு, உயிர்கொண்று. வாழ்வர் நின் ஐயர் உடல்புக்கு, உயிர் கொண்று, வாழ்வைமண் நீயும் மிடல் புக்கு அடங்காத வெம்முலையோ பாரம், இடர்புக்கு இடுகும் இடை இழவல் கண்டாய் 17

கொடுங்கண் வலையால் உயிர் கொல்வாண் நுந்தை நெடுங்கண் வலையால் உயிர்கொல்வை மண் நீயும், வடம்கொள் முலையால் மழைமின்னுப் போல நுடங்கி உகும்மெண் நுசுப்புஇழவல் கண்டாய் 18