பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கானல் வரி

ஒடும் திமில்கொண்டு உயிர்கொல்வர் நின் ஐயர் கோடும் புருவத்து உயிர்கொல்வை மண்.நீயும், பீடும் பிறர் எவ்வம் பாராய், முலை சுமந்து வாடும் சிறுமெண் மருங்கு இழவல் கண்டாய்

தலைவன் தலைவி அருமை கூறல் பவள உலக்கை கையால் பற்றித், தவள முத்தங் குறுவாள் செங்கண். தவள முத்தம் குறுவாள் செங்கண் குவளை அல்ல கொடிய கொடிய

புன்னை நீழல் புலவுத் திரைவாய் அன்னம் நடப்ப, நடப்பாள் செங்கண், அண்னம் நடப்ப நடப்பாள் செங்கண் கொண்னே வெய்ய கூற்றம் கூற்றம்!

கள்வாய் நீலம் கையின் ஏந்திப், புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கள்ை, புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கள்ை வெள்வேல் அல்ல வெய்யவெய்ய

சேரல் மட அண்னம்! சேரல், நடை ஒவ்வாய், சேரல், மட அண்னம் சேரல் நடை ஒவ்வாய், ஊர்திரை நீர்வேலி உழக்கித் திரிவாள்பிண் சேரல், மட அண்னம் சேரல், நடை ஒவ்வாய்!

கட்டுரை ஆங்குக், கானல்வரிப் பாடல்கேட்ட மான் நெடுங்கண் மாதவியும், மன்னும் ஓர் குறிப்பு உண்டு, இவன்தண் நிலை மயங்கினாண் எனக் கலவியால் மகிழ்ந்தாள் போல்.

19

20

21

22

23