பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 சிலப்பதிகாரம்

புலவியால் யாழ் வாங்கித்

தானும் ஒர் குறிப்பினள் போல்,

கானல் வரிப் பாடல் பாணி,

நிலத்தெய்வம் வியப்பு எய்த,

நீள்நிலத்தோர் மனம் மகிழக் கலத்தொடு புணர்ந்து அமைந்த கண்டத்தால் பாடத் தொடங்கும்மண். 24

காவிரி நோக்கிப் பாடுதல்

ஆற்றுவரி மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப மணிப்பூ ஆடை - அது போர்த்துக் கருங்கயல் கண் விழித்து, ஒல்கி, நடந்தாய் வாழி காவேரி கருங்கயல் கண் விழித்து ஒல்கி நடந்த எல்லாம் நின் கணவண் திருந்து செங்கோல் வளையாமை, அறிந்தேன், வாழி காவேரி 25

பூவார் சோலை மயில் ஆலப்

புரிந்து குயில்கள் இசைபாடக், காமர் மாலை அருகு அசைய

நடந்தாய் வாழி, காவேரி!

காமர் மாலை அருகு அசைய, நடந்த எல்லாம் நிண் கணவன்

நாம வேலின் திறம் கண்ட்ே;

அறிந்தேன் வாழி, காவேரி 26

வாழி அவன் தண் வளநாடு மகவாய், வளர்க்கும் தாய் ஆகி, ஊழி உய்க்கும் பேருதவி ஒழியய் வாழி காவேரி!