பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

சிலம்பு பாரதியைக் கவர்ந்தது; இந்தப் பாரினை அளந்தது. உலகுக்கு ஒர் அரிய படைப்பைத் தந்தது; பெண் அவள் சமுதாயப் பெருவாழ்வில் பங்கு கொள்ளத் தகுதி படைத்தவள் என்று காட்டிய முதற் காவியம் இச் சிலப்பதிகாரம்.

தமிழகம் என்ற உணர்வினைத் தந்தது அமிழ்தினும் இனிய இவ் அருங்காப்பியம் ஆகும். அரசியலில் அறம் அடிப்படை என்று அலசிக் காட்டி வாழ்வின் சீர் கேடுகளுக்குத் தீர்வு அரசியலில் நேர்மை, செம்மை இருக்க வேண்டும் என்று காட்டுவது இந்நூல். - .

வள்ளுவத்தையே ஒரு மாபெருங்காவியமாகத் தந்தவர் இளங்கோவடிகள்; பாத்திரப் படைப்பில் குறட்பாக்களின் கருத்துக்களைப் பேச வைத்தவர்; இயக்க வைத்தவர். இது திருக்குறள், கம்பராமாயணம், போன்று மதிக்கப்பட்ட காவியம் ஆகும்.

இதற்குப் பல உரை நூல்கள் வந்துள்ளன. மூலநூல் தனியாக யாரும் அச்சிட முன்வரவில்லை. உரை இல்லாமல் படிக்க இயலாது என்று கருதப்படுகிறது. ஒருசில பகுதிகள் உரை இருந்தாலும் படித்து உணர முடியாது என்பதுதான் உண்மை. அந்த நூல்கள் அகராதிகள் போன்றவை.

மூலநூல் மட்டும் வெளியிடுவது தேவை என்று உணரப் பட்டது. அதனோடு திறனாய்வுக் கட்டுரைகள் தரப் பட்டுள்ளன. -

மூலநூலைப் பதிப்பித்தது முதற்படி, அதனை நன்கு கற்று ஒரளவு தெளிவு பெற்றுத் துணிந்து கட்டுரைகள் தரப்பட்டன; இது இரண்டாவது படி.

திறனாய்வு வேறுபட இயலும்; பலர் கட்டுரைகள் எழுதி உள்ளனர். அவற்றோடு இவையும் சேர்ந்தால் மேலும்

விளக்கங்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது.

- ரா. சீனிவாசன்