பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 சிலப்பதிகாரம்

கதிரவன் மறைந்தனனே காரிருள் பரந்ததுவே

எதிர்மலர் புரையுண்கண் எவ்வநீர் உகுத்தனவே புதுமதி புரைமுகத்தாய் போனார் நாட்டுளதாங்கொல்

மதிஉமிழ்ந்து கதிர்விழுங்கிவந்தஇம் மருள்மாலை. 40

பறவை பாட்டு அடங்கினவே பகல் செய்வான் மறைந்தனனே நிறைநிலா நோய் கூர நெடுங்கண் நீர் உகுத்தனவே துறுமலர் அவிழ் குழலாய் துறந்தார் நாட்டு உளதாம்கொல் மறவைஆய், எண்உயிர்மேல் வந்தஇம் மருள்மாலை? 41

கைதை வேலிக் கழிவாய் வந்து, எம் பொய்தல் அழித்துப் போனார் ஒருவர் பொய்தல் அழித்துப் போனார், அவர்நம் மையல் மனம்விட்டு அகல்வார் அல்லர். 42

கானல் வேலிக் கழிவாய் வந்து 'நீ நல்கு' என்றே நின்றார் ஒருவர் நீ நல்கு என்றே நின்றார், அவர்நம் மாண்நேர் நோக்கம் மறப்பார் அல்லர் 43

அண்னம் துணையோடு ஆடக் கண்டு, நென்னல் நோக்கி நின்றார் ஒருவர், நென்னல் நோக்கி நின்றார், அவர்நம் பொண்நேர் சுணங்கின் போவார் அல்லர். 44

உறுநோய் உரைக்க அடையல், குருகே அடையல் எம் கானல் அடையல் குருகே அடையல் எம் கானல் உடைதிரை நீர்ச் சேர்ப்பற்கு உறுநோய் உரையாய் அடையல், குருகே அடையல் எம் கானல்! - 45

பணி பெயர்த்தல் ஆங்கனம் பாடிய ஆய் இழை, பின்னரும், காந்தள் மெல்விரல் கைக்கிளை சேர்குரல்