பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கானல் வரி

51

தீந்தொடைச் செவ்வழிப் பாலை இசை எழி இப் பாங்கினில் பாடி, ஒர் பண்ணுப் பெயர்த்தாள். நுளையர் விளரி நொடிதரும் தீம்பாலை இளி கிளையில் கொள்ள இறுத்தாயால், மாலை ! இளி கிளையில் கொள்ள இறுத்தாய்மண் நீயேல், கொளை வல்லாய் ! எண் ஆவி கொள்; வாழி; மாலை !

பிரிந்தார் பரிந்து உரைத்த பேர் இருளின் நீழல் இருந்து, ஏங்கி, வாழ்வார் உயிர்ப்புறத்தாய், மாலை ! உயிர்ப் புறத்தாய் நீ ஆகில், உள் ஆற்றா வேந்தன் எயிற்புறத்து வேந்தனோடு எண் ஆதி, மாலை ? பையுள்நோய் கூரப், பகல் செய்வான் போய்வீழ, வையமோ கண்புதைப்ப, வந்தாய், மருள்மாலை ! மாலை நீ ஆயின், மணந்தார் அவர் ஆயின, ஞாலமோ நல்கூர்ந்தது; வாழி, மாலை ! தீத்துழைஇ வந்தஇச் செவ்வண் மருள்மாலை துக்காது துணிந்தஇத் துயரெஞ்சு கிளவியால் பூக்கமழ் கானலிற் பொய்ச்சூள் பொறுக்கென்று மாக்கடல் தெய்வநிண் மலரடி வணங்குதும்

எனக்கேட்டு, கானல்வரி யாண்பாடத் தான் ஒன்றின் மேல் மனம்

(வைத்து,

மாயப்பொய் பலகூட்டும் மாயத்தாள் பாடினாள் என, யாழ் - இசைமேல் வைத்துத் தண் ஊழ்வினை வந்து

(உருத்தது ஆகலின்,

உவவுஉற்ற திங்கள் முகத்தாளைக் கவவுக்கை

(ஞெகிழ்ந்தனனாய்ப்

பொழுது ஈங்குக் கழிந்தது ஆகலின், எழுதும்' என்று

(உடன் எழாது. ஏவலாளர் உடன் சூழ்தரக் கோவலன்-தாண் போன பின்னர்த்

46

47

48

49

50