பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 சிலப்பதிகாரம்

தனியே சென்றாள் தாது அவிழ் மலர்ச்சோலை, ஓதை ஆயத்து ஒலி அவித்துக் கையற்ற நெஞ்சினளாய், வையத்தின் உள்புக்குக் காதலனுடன் அன்றியே, மாதவி தன் மனை புக்காள், ஆங்கு, மாஇரு ஞாலத்து அரசு தலை வணக்கும், சூழியானைச் சுடர் வாள் செம்பியன் மாலை வெண்குடை கவிப்ப, ஆழி, மால் வரை அகவையா எனவே, 50

8. வேனிற் காதை

இளவேனில் வந்தது

(நிலைமண்டில ஆசிரியப்பா) "நெடியோண் குன்றமும், தொடியோள் பெளவமும், தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நல்நாட்டு, மாட மதுரையும், பீடுஆர் உறந்தையும், கலிகெழு வஞ்சியும், ஒலிபுனல் புகாரும், அரைசு வீற்றிருந்த உரைசால் சிறப்பின் 5

மன்னண் மாரன் மகிழ் துணை ஆகிய இண்இள வேனில் வந்தது இவண்" என, வளங்கெழு பொதியில் மாமுனி பயந்த இளங்கால்-துதண் இசைத்தனன்; ஆதலின், மகர வெல்கொடி மைந்தண் சேனை 10

'புகள் அறு கோலம் கொள்ளும்' என்பது போல் கொடிமிடை சோலைக் குயிலோன் என்னும் படையுள் படுவோன் பணிமொழி கூற

பூங்கொடி மயங்கல் மடல்அவிழ் கானல் கடல்விளையாட்டினுள் கோவலன் ஊடக் கூடாது ஏகிய 15