பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேனிற் காதை

53

மாமலர் நெடுங்கண் மாதவி விரும்பி வான் உற நிவந்த மேல்நிலை மருங்கின் வேனிற் பள்ளி ஏறி, மாண் இழை தெண்கடல் முத்தும் தெண்மலைச் சந்தும் தண்கடன் இறுக்கும் தன்மைய ஆதலின் கொங்கை முன்றில் குங்கும வளாகத்து, மை அறு சிறப்பின் கையுறை ஏந்தி : அதிரா மரபின் யாழ்கை வாங்கி மதுர கீதம் பாடினள். மயங்கி - ஒண்பான விருத்தியுள் தலைக்கண் விருத்தி நண்பால் அமைந்த இருக்கையள் ஆகி ;

யாழ்இசை கூட்டுதல் வலக்கைப் பதாகை கோட்டொடு சேர்த்தி, இடக்கை நால்விரல் மாடகம் தழி இச். செம்பகை, ஆர்ப்பே, கூடம், அதிர்வே, வெம்பகை நீக்கும் விரகுளி அறிந்து,

பிழையா மரபின் ஈர்-ஏழ் கோவையை உழைமுதல் கைக்கிளை இறுவாய்க் கட்டி இணை, கிளை, பகை, நட்பு எண்று இந்நாண்கின் இசைபுணர் குறிநிலை எய்த நோக்கி, குரல்வாய், இளிவாய்க் கேட்டனள். அன்றியும்;

வரண்முறை மருங்கின் ஐந்தினும், ஏழினும், உழைமுதல் ஆகவும், உழைஈறு ஆகவும் குரல்முதல் ஆகவும்; குரல் ஈறு ஆகவும் அகநிலை மருதமும் புறநிலை மருதமும், அருகியல் மருதமும் பெருகியல் மருதமும்,

நால்வகைச் சாதியும் நலம்பெற நோக்கி, மூவகை இயக்கமும் முறையுளிக் கழிப்பித் திறத்து வழிப்படு உம் தெள்ளிசைக் கரணத்துப் புறத்து ஒருபாணியில் பூங்கொடி மயங்கிச்

20

30

40