பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 சிலப்பதிகாரம்

முடங்கல் எழுதுதல் சண்பகம், மாதவி, தமாலம், கருமுகை, 45 வெண்பூ மல்லிகை, வேரொடு மிடைந்த அம்செங் கழு நீர், ஆய் இதழ்க் கத்திகை எதிர்பூஞ் செவ்வி இடைநிலத்து யாத்த முதிர்பூந் தாழை முடங்கல் வெண் தோட்டு விரைமலர் வாளியின் வியல்நிலம் ஆண்ட 50

ஒருதனிச் செங்கோல் ஒருமகன் ஆணையின் திருமுகம் அன்றி. உலகு தொழுது இறைஞ்சும் திருமுகம் போக்குஞ் செவ்வியள் ஆகி அலத்தகக் கொழுஞ்சேறு அளைஇ அயலது பித்திகைக் கொழுமுகை ஆணி கைக்கொண்டு 55

முடங். ல் வாசகம் "மண்ணுயிர் எல்லாம் மகிழ்துணை புணர்க்கும் இண்இள வேனில் இளவர சாளன்; அந்திப் போதகத்து அரும்பிடர்த் தோன்றிய திங்கட் செல்வனும் செவ்வியண் அல்லண்; புணர்ந்த மாக்கள் பொழுது இடைப் படுப்பினும், 60

தணந்த மாக்கள் தம்துணை மறப்பினும், நறும்பூ வாளியின் நல் உயிர் கோடல் இறும்பூது அன்று, இஃது அறிந்துஈமின் என, எண் எண் கலையும் இசைந்து உடன் போகப்; பண்ணும் திறனும் புறங்கூறு நாவின் 65

தளைவாய் அவிழ்ந்த தனிப்படு காமத்து விளையா மழலையின் விரித்து உரை எழுதிப்; பசந்த மேனியள், படர்உறு மாலையின் வசந்த மாலையை, 'வருக எனக் கூஉய்த், து மலர் மாலையிண் துணிபொருள் எல்லாம் 70