பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேனிற் காதை

55

கோவலன் மறுத்தல்

கோவலற்கு அளித்துக் கொணர்க சங்கு' எனத் . மாலை வாங்கிய வேலரி நெடுங்கண் கூலம் மறுகிற் கோவலற் களிப்பத் திலகமும், அளகமும், சிறுகருஞ் சிலையும், குவளையும், குமிழும், கொவ்வையும் கொண்ட

மாதர் வாள் முகத்து, மதைஇய நோக்கமொடு காதலின் தோன்றிய கண்கூடு வரியும்; புயல் சுமந்து வருந்திப் பொழிகதிர் மதியத்துக் கயல்உலாய்த் திரிதரும் காமர் செவ்வியிற் பாகுபொதி பவளம் திறந்து, நிலா உதவிய

நாகுஇள முத்தின் நகைநலம் காட்டி, 'வருக' என வந்து, போக எனப் போகிய கருநெடுங் கண்ணி காண்வரிக் கோலமும்; அந்தி மாலை வந்ததற்கு இரங்கிச் சிந்தைநோய் கூரும் என் சிறுமை நோக்கிக்,

கிளிபுரை கிளவியும், மடஅன நடையும், களிமயில் சாயலும் கரந்தனள் ஆகிச் செருவேல் நெடுங்கண் சிலதியர் கோலத்து ஒருதனி வந்த உள்வரி ஆடலும் சிலம்புவாய் புலம்பவும், மேகலை ஆர்ப்பவும்,

கலம்பெறா நுசுப்பினள் காதல் நோக்கமொடு திறத்துவேறு ஆய எண் சிறுமை நோக்கியும், புறத்து நின்று ஆடிய புண்புற வரியும்; கோதையும், குழலும், தாதுசேர் அளகமும் ஒருகாழ் முத்தமும், திருமுலைத் தடமும்,

மின் இடை வருத்த நல் நுதல் தோன்றிச் சிறுகுறுந் தொழிலியர் மறுமொழி உய்ப்பப் புணர்ச்சியுட் பொதித்த கலாம்தரு கிளவியின்

80

85

30

95