பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனாத்திறம் உரைத்த காதை

59

நற்றிறம் கேட்கின் நகை ஆகும் "-பொற்றொடீஇ கைத்தாயும் அல்லை கணவற்கு ஒரு நோண்பு பொய்த்தாய் பழம்பிறப்பில்; போய்க்கெடுக; உய்த்துக் கடலொடு காவிரி சென்று அலைக்கும் முன்றில், மடலவிழ் நெய்தல்.அம் கானல், தடம் உள. சோமகுண்டம், சூரிய குண்டம்; துறைமூழ்கிக், காமவேள் கோட்டம் தொழுதார், கணவரொடு

தாம் இன் புறுவர் உலகத்துத் தையலார்; போகம்செய் பூமியினும் போய்ப்பிறப்பார்; யாம் ஒரு நாள் ஆடுதும் என்ற அணி இழைக்கு அவ் ஆயிழையாள் பீடன்று என இருந்த பின்னரே நீடிய காவலன் போலும், கடைத்தலையாண் வந்து - நம் கோவலன்' என்றாள் ஒர் குற்றிளையாள்; கோவலனும் பாடு.அமை சேக்கையுள் புக்குத் தண் பைந்தொடி வாடியமேனி வருத்தம் கண்டு, யாவும் சலம்புணர் கொள்கைச் சலதியொடு ஆடிக், குலம்தரு வான் பொருள் குன்றம் தொலைந்த

இலம்பாடு நானுத் தரும் எனக்கு' என்ன - நலம்கேழ் முறுவல் நகைமுகம் காட்டிச் சிலம்பு உள; கொண்ம்' எனச் சேயிழை கேள்இச் சிலம்பு முதல் ஆகச் சென்ற கலனோடு உலந்த பொருள் ஈட்டுதல் உற்றேன், மலர்ந்தசீர் மாட மதுரையகத்துச் சென்று எண்னோடு இங்கு ஏடு அலர் கோதாய் ! எழுக' என்று நீடிய வினை கடைக் கூட்ட வியம் கொண்டாண்-கங்குல் கனைசுடர் கால்சீயா முண்.

வெண்பா காதலி கண்ட கனவு கருநெடுங்கண் மாதவி தண் சொல்லை வறிதாக்க-முந்தை வினைகடைக் கூட்ட வியம்கொண்டாண் கங்குல்

கனைசுடர் கால்சீயா முண்.

55

70

79