பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

so சிலப்பதிகாரம்

10. நாடுகாண் காதை

வாயிலைக் கடத்தல் வாண்கண் விழியா வைகறை யாமத்து மீன்திகழ் விசும்பின் வெண்மதி நீங்கக் காரிருள் நின்ற கடைநாள் கங்குல் ஊழ்வினை கடைஇ உள்ளம் துரப்ப, ஏழகத் தகரும், எகினக் கவரியும், 5

து மயிர் அண்னமும், துணைஎனத் திரியும், தாளொடு குயின்ற தகைசால் சிறப்பின் நீள்நெடு வாயில் நெடுங்கடை கழிந்து - ஆங்கு - அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த மணிவண்ணண் கோட்டம் வலம் செயாக் கழிந்து - 10

பணைஐந்து ஓங்கிய பாசிலைப் போதி அணிதிகழ் நீழல் அறவோன் திருமொழி அந்தர சாரிகள் அறைந்தனர் சாற்றும் இந்திர விகாரம் ஏழ்உடன் போகிப் புலவுஊண் துறந்து, பொய்யா விரதத்து, 15

அவலம் நீத்து, அறிந்து அடங்கிய கொள்கை, மெய்வகை உணர்ந்த விழுமியோர் குழி இய ஐவகை நின்ற அருகத் தானத்துச் சந்தி ஐந்தும் தம்முடன் கூடி வந்து, தலைமயங்கிய வாண்பெரு மன்றத்துப், 20

பொலம்பூம் பிண்டி நலங்கிளர் கொழுநிழல் நீர்அணி விழவினும், நெடுந்தேர் விழவினும் சாரணர் வரூஉம் தகுதிஉணர் டாம் என, உலக நோண்பிகள் ஒருங்குடன் இட்ட இலகுஒளிச் சிலாதலம் தொழுது, வலம் கொண்டு - 25 மலைதலைக் கொண்ட பேர்யாறு போலும் உலக இடைகழி ஒருங்குடன் நீங்கிக் -