பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடுகாணி காதை

61

கலையி லாளண் காமர் வேனிலொடு மலைய மாருதம் மன்னவற்கு இறுக்கும் பண்மலர் அடுக்கிய நண்மரப் பந்தர்

கவுந்தியடிகளைச் சந்தித்தல் இலவந் திகையின் எயிற்புறம் போகித் தாழ்பொழில் உடுத்த தண்பதப் பெருவழிக் காவிரி வாயிற் கடைமுகம் கழிந்து குடதிசைக் கொண்டு கொழும்புனற் காவிரி வடபெருங் கோட்டு மலர்ப்பொழில் நுழைந்து -

காவதம் கடந்து, கவுந்திப் பள்ளிப் பூமரப் பொதும்பர்ப் பொருந்தி, ஆங்கண், இறும்கொடி நுசுப்போடு இனைத்து. அடி வருந்தி, நறும்பல் கூந்தல் குறும்பல உயிர்த்து முதிராக் கிளவியின் முள் எயிறு இலங்க

'மதுரை மூதுார் யாது ' என வினவ

ஆறு - ஐங் காதம் நம் அகல்நாட்டு உம்பர் 'நாறு ஐங் கூந்தல்: நணத்து என நக்குத் தேமொழி தன்னொடும், சிறையகத்து இருந்த காவுந்தி ஐயையைக் கண்டு, அடிதொழலும் - உருவும், குலனும், உயர்பேர் ஒழுக்கமும், பெருமகன் திருமொழி பிறழா நோன்பும் உடையீர்! எண்னோ, உறுக ணாளரின் கடைகழிந்து இங்ங்னம் கருதிய வாறு' என உரையாட்டு இல்லை ! உறு தவத்தீர்! யாண்

மதுரை மூதுார் வரைபொருள் வேட்கையேண்; ' பாடகச் சீறடி பரற்பகை உழவா, காடுஇடை யிட்ட நாடுநீர் கழிதற்கு அரிது இவள் செவ்வி அறிகுநர் யாரோ !

உரியது அன்று ஈங்கு ஒழிக" என, ஒழியீர்,

3()

40

45

50

55