பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 சிலப்பதிகாரம்

ஒங்குநீர்ப் பிழாவும் ஒலித்தல் செல்லாக் கழனிச் செந்நெல், கரும்புசூழ் மருங்கிற் பழனத் தாமரைப் பைம்பூங் கானத்துக் கம்புட் கோழியும், கனகுரல் நாரையும் செங்கால் அண்னமும் பைங்காற் கொக்கும்; 115 கானக் கோழியும், நீர்நிறக் காக்கையும், உள்ளும், ஊரலும், புள்ளும், புதாவும், வெல்போர் வேந்தர் முனையிடம் போலப் ; பல்வேறு குழுஉக்குரல் பரந்த ஒதையும் -

உழவர்தம் உயர்வு - உழாஅ நுண்தொளி உள்புக்கு அழுந்திய | 20 கழாஅ மயிர் யாக்கைச் செங்கண் காராண் - சொரிபுறம் உரிஞ்சப் புரிஞெகிழ்பு உற்ற குமரிக் கூட்டிற் கொழும்பல் உணவு கவரிச் செந்நெல் காய்த்தலைச் சொரியக் கருங்கை வினைஞரும் களமரும் கூடி 125 ஒருங்குநின்று ஆர்க்கும் ஒலியே அன்றியும், கடிமலர் களைந்து முடிநாறு அழுத்தித் தொடிவளைத் தோளும் ஆகமும் தோய்ந்து சேறுஆடு கோலமொடு வீறுபெறத் தோன்றிச் செங்கயல் நெடுங்கண் சிண்மொழிக் கடைசியர் 130 வெங்கள் தொலைச்சிய விருந்தின் பாணியும்; கொழுங்கொடி அறுகையும் குவளையுங் கலந்து, விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப் பார்உடைப் பனர்போல் பழிச்சினர் கைதொழ ஏரொடு நின்றோர் ஏர்மங்கலமும்; 135 அரிந்து கால் குவித்தோர் அரிகடா வுறுத்த பெருஞ் செய்ந் நெல்லின் முகவைப் பாட்டும்; தெண்கிணைப் பொருநர் செருக்குடன் எடுத்த மண்கனை முழவின் மகிழ்இசை ஒதையும் ;