பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடுகாண் காதை

65

வழியிடை ஊர்கள் பேர்யாற்று அடைகரை நீரிற் கேட்டு, ஆங்கு, ! 40 ஆர்வ நெஞ்சமோடு அவலம் கொள்ளார்;உழைப்புலிக் கொடித்தேர் உரவோன் கொற்றமொடு மழைக்கரு உயிர்க்கும் அழல்திகழ் அட்டில் மறையோர் ஆக்கிய ஆவுதி நறும்புகை இறையுயர் மாடம் எங்கணும் போர்த்து, மஞ்சுசூழ் மலையின் மாணத் தோன்றும், மங்கல மறையோர் இருக்கை அன்றியும். பரப்புநீர்க் காவிரிப் பாவை-தண் புதல்வர் இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளைப்போர் பழவிறல் ஊர்களும்; பொங்கழி ஆலைப் புகையொடும் பரந்து, மங்குல் வானத்து மலையின் தோண்றும், ஊர் இடையிட்ட நாடுடன் கண்டு, காவதம் அல்லது கடவார் ஆகிப் பன்னாள் தங்கிச் செல்நாள், ஒருநாள் -

சாரணர் அறிவுரைகள் ஆற்றுவி அரங்கத்து வீற்றுவீற்று ஆகிக் குரங்கு.அமை உடுத்த மரம்பயில் அடுக்கத்து வானவர் உறையும் பூநாறு ஒருசிறைப் பட்டினப் பாக்கம் விட்டனர். நீங்காப் பெரும்பெயர் ஐயர் ஒருங்குடன் இட்ட இலங்குஒளிச் சிலாதலம் மேல்இருந் தருளிப் பெருமகன் அதிசயம் பிறழா வாய்மைத் தருமம் சாற்றும் சாரணர் தோண்றப்

அருகன் புகழ் 'பண்டைத் தொல்வினை பாறுக' என்றே, கண்டறி கவுந்தியொடு காலுற வீழ்ந்தோர் வந்த காரணம், வயங்கிய கொள்கைச் சிந்தை விளக்கிண் தெரிந்தோன் ஆயினும், ஆர்வமுஞ் செற்றமும் அகல நீக்கிய - வீரன் ஆகலின் விழுமம் கொள்ளாண் -

| 45

150

160

165