பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடுகாண் காதை

67

கைவரைக் காணினும் காணா எண்கணி: அருளறம் பூண்டோன் திருமெய்க்கு அல்லது. எண் பொருள்இல் யாக்கை பூமியில் பொருந்தாது. அருகன். அறவன், அறிவோற்கு அல்லது. எண் இருகையும் கூடி ஒருவழிக் குவியா மலர்மிசை நடந்தோண் மலரடி அல்லது, எண் தலைமிசை உச்சி தான் அணிப் பொறாஅது இறுதியில் இன்பத்து இறைமொழிக்கு அல்லது மறுதர ஒதி எண் மனம்புடை பெயராது என்றவண் இசைமொழி ஏத்தக்கேட்டு, அதற்கு ஒன்றிய மாதவர், உயர்மிசை ஓங்கி, நிவந்து, ஆங்கு ஒருமுழம் நீள்நிலம் நீங்கிப், பவம்தரு பாசம் கவுந்தி கெடுக என்று, அந்தரம் ஆறாப் படர்வோர்த் தொழுது, பந்தம் அறுக எனப் பணிந்தனர் போந்து

வம்பரின் குறுமொழி காரணிபூம்பொழிற் காவிரிப் பேர்யாற்று நீரணி மாடத்து நெடுந்துறை போகி, மாதரும், கணவனும், மாதவத்து ஆட்டியும், தீதுதிர் நியமத் தென்கரை எய்திப், போதுசூழ் கிடக்கை ஒர் பூம்பொழில் இருந்துழி வம்பப் பரத்தை வறுமொழி.யாளனொடு -- கொங்கு அலர் பூம்பொழில் குறுகினர் சென்றோர், காமனும் தேவியும் போலும் ஈங்குஇவர் ஆர்? எனக் கேட்டு, ஈங்கு அறிகுவம் என்றே நோற்று உணல் யாக்கை நொசிதவத்தீர் உடன் ஆற்றுவழிப் பட்டோர் ஆர்? என வினவ என் மக்கள் காணtர் மானிட யாக்கையர் பக்கம் நீங்குமின். பினர் என உடன்வயிற் றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை கடவதும் உண்டோ கற்றறிந் தீர்! எனத்

200

205

210

215

220

225