பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காடுகாண் காதை

69

பரந்துஇசை எய்திய பாரதி-விருத்தியும், திணைநிலை வரியும், இணைநிலை வரியும், அணைவுறக் கிடந்த யாழின் தொகுதியும். ஈர்-ஏழ் சகோடமும், இடைநிலைப் பாலையும், தாரத்து ஆக்கமும், தான் தெரி பண்ணும்,

ஊர் அகத்து ஏரும், ஒளியுடைப் பாணியும், என்று இவை அனைத்தும் பிறபொருள் வைப்போடு ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும், ஒருபரிசா நோக்கிக் கிடந்த புகார்க் காண்டம் முற்றிற்று.

வெண்பா காலை அரும்பி மலரும் கதிரவனும் மாலை மதியமும் போல் வாழியரோ வேலை அகழால் அமைந்த அவனிக்கு மாலைப் புகழால் அமைந்த புகார்

2. மதுரைக் காண்டம்

11. காடுகாணி காதை (நிலைமண்டில ஆசிரியப்பா ) மாங்காட்டு மறையோன் வருகை திங்கள்மூண் றடுக்கிய திருமுக் குடைக்கீழ் செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து, கோதைதாழ் பிண்டிக் கொழுநிழல் இருந்த ஆதிஇல் தோற்றத்து அறிவனை வணங்கிக் கந்தண் பள்ளிக் கடவுளர்க்கு எல்லாம்

அந்தில் அரங்கத்து அகண்பொழில் அகவயின் சாரணர் கூறிய தகைசால் நண்மொழி மாதவத்து ஆட்டியும் மாண்புற மொழிந்து, ஆங்கு, அன்று, அவர் உறைவிடத்து அல்கினர் அடங்கித் தெண் திசை மருங்கிற் செலவு விருப்புற்று.

20