பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காடுகாண் காதை

71

வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும் ஓங்குயர் மலையத்து உச்சி மீமிசை, விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி, இருமருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து மின்னுக் கோடி யுடுத்து விளங்குவிற் பூண்டு, நண்ணிற மேகம் நின்றது போலப், பகையணங்கு ஆழியும், பால்வெண் சங்கமும், தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி, நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு. பொலம்பூ ஆடையின் பொலிந்து தோன்றிய, செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும், எண்கணி காட்டு என்று எண் உளங் கவற்ற வந்தேன் குடமலை மாங்காட்டு உள்ளேன் ;தென்னவன் நாட்டுச் சிறப்பும் செய்கையும் கண்மணி குளிர்ப்பக் கண்டேன்; ஆதலின், வாழ்த்தி வந்திருந்தேன்; இது எண் வரவு' எனத், தீத்திறம் புரிந்தோன் செப்பக் கேட்டு - 'மா மறை முதல்வ! மதுரைச் செல்நெறி கூறு நீ" எனக், கோவலற்கு உரைக்கும்;

பாலை வடிவம் கோத்தொழி லாளரொடு கொற்றவண் கோடி, வேத்தியல் இழந்த வியனிலம் போல, வேனல்அம் கிழவனொடு வெங்கதிர் வேந்தன் தானலம் திருகத் தன்மையிற் குன்றி, முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து, நல்லியல்பு இழந்து, நடுங்குதுயர் உறுத்துப், பாலை என்பதோர் படிவம் கொள்ளும் காலை எய்தினிர் காரிகை தன்னுடன்

45

50

55

60

65