பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 சிலப்பதிகாரம்

வழிகள்

அறையும், பொறையும், ஆர்.இடை மயக்கமும், நிறைநீர் வேலியும் முறைபடக் கிடந்தஇந் நெடும்பேர் அத்தம் நீந்திச் சென்று. கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் புக்கால், பிறைமுடிக் கண்ணிப் பெரியோண் ஏந்திய அறைவாய்ச்.சூலத்து அருநெறி கவர்க்கும்

வலமாகச் செல்லுதல் வலம்படக் கிடந்த வழிநீர் துணியிண். அலறுதலை மராமும், உலறுதலை ஒமையும், 75 பொரியரை உழிஞ்சிலும், புண்முளி மூங்கிலும், வரிமரல் திரங்கிய கரிபுறக் கிடக்கையும், நீர்நசைஇ வேட்கையின் மாண்நின்று விளிக்கும் கானமும், எயினர் கடமும் கடந்தால், ஐவன வெண்ணெலும், அறைக்கண் கரும்பும், 80 கொய்பூந் தினையும், கொழும்புன வரகும். காயமும், மஞ்சளும், ஆய்கொடிக் கவலையும், வாழையும், கமுகும், தாழ்குலைத் தெங்கும். மாவும், பலாவும், சூழ் அடுத்து ஓங்கிய தெண்னவண் சிறுமலை திகழ்ந்து தோன்றும்; 85 அம்மலை வலங்கொண்டு அகண்பதிச் செல்லுமின் -

இடமாகச் செல்லுதல் அவ்வழிப் படரீர் ஆயின், இடத்துச் செவ்வழிப் பண்ணின் சிறைவண்டு அரற்றும் தடந்தாழ் வயலொடு தண்பூங் காவொடு கடம்பல கிடந்த காடுடன் கழிந்து, 90 திருமால் குன்றத்துச் செல்குவிர் ஆயின், பெருமால் கெடுக்கும் பிலம் உண்டு; ஆங்கு விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபின் புண்ணிய சரவணம், பவகாரணியோடு இட்ட சித்தி எனும்பெயர் போகி, 95