பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காடுகாண் காதை 73

விட்டு நீங்கா விளங்கிய பொய்கை முட்டாச் சிறப்பின் மூன்றுஉள- ஆங்குப் புண்ணிய சரவணம் பொருந்துவிர் ஆயின், விண்ணவர் கோமான் விழுநூல் எய்துவிர்; பவகா ரணி படிந்து ஆடுவிர் ஆயின், 100 பவகா ரணத்தின் பழம்பிறப்பு எய்துவிர் இட்டசித்தி எய்துவிராயின்

இட்ட சித்தி எய்துவிர் நீரே! ஆங்குப் பிலம்புக வேண்டுதிர் ஆயின், ஓங்குஉயர் மலையத்து உயர்ந்தோன் தொழுது, 105 சிந்தையில் அவன்தன் சேவடி வைத்து, வந்தனை மும்முறை மலைவலம் செய்தால், நிலம்பக வீழ்ந்த சிலம்பாற்று அகண்தலைப் பொலங்கொடி மின்னின் புயல்ஜங் கூந்தல் கடிமலர் அவிழ்ந்த கண்னிகா ரத்துத் 110 தொடிவனைத் தோளி ஒருத்தி தோன்றி, இம்மைக்கு இன்பமும், மறுமைக்கு இன்பமும், இம்மையும் மறுமையும் இரண்டும் இன்றிஓர் செம்மையில் நிற்பதும் செப்புமின், நீயிர் இவ்

வரைத்தாள் வாழ்வேன்; வரோத்தமை எண்பேன்; 115 உரைத்தார்க்கு உரியேண் உரைத்தீர் ஆயிண், திருத்தக் கீர்க்குத் திறந்தேன் கதவு" எனும் கதவந் திறந்து, அவள் காட்டியநண் னெறிப் புதவம் பலஉள, போகு இடை கழியன: ஒட்டுப் புதவம் ஒன்று உண்டு அதன் உம்பர் 120 வட்டிகைப் பூங்கொடி வந்து தோன்றி, இறுதிஇல் இண்பம் எனக்கு ஈங்கு உரைத்தால், பெறுதிர் போலும் நீர் பேணிய பொருள் எனும் உரையீர் ஆயினும் உறுகணன் செய்யேன், நெடுவழிப் புறத்து நீக்குவல் நும் எனும் 125 உரைத்தார் உளர்.எனின் உரைத்த மூன்றின்