பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காடுகாண் காதை 75

இறந்த பிறப்பின் எய்திய வெல்லாம் பிறந்த பிறப்பிற் காணாயோ நீ ? வாய்மையின் வழாஅது மண்னுயிர் ஒம்புநர்க்கு யாவதும் உண்டோ, எய்தா அரும்பொருள் : காமுறு தெய்வம் கண்டு அடி பணிய 160 நீ போ, யாங்களும் நீள்நெறிப் படர்குதும்" என்ற மறையோற்கு இசைமொழி உணர்த்திக் -

குண்றாக் கொள்கைக் கோவலன்-தன்னுடன் அண்றைப் பகல் ஓர் அரும்பதித் தங்கிப், பின்றையும் அவ்வழிப் பெயர்ந்துசெல் வழிநாள் - 165

கருந்தடங் கண்ணியும் கவுந்தி யடிகளும் வகுந்துசெல் வருத்தத்து வழிமருங்கு இருப்ப இடைநெறிக் கிடந்த இயவுகொள் மருங்கின் புடைநெறிப் போய் ஓர் பொய்கையிற் சென்று. நீர்நசை வேட்கையின் நெடுந்துறை நிற்பக் - 170

காண்உறை தெய்வங் காதலிற் சென்று. 'நயந்த காதலின் நல்குவண் இவன்' என, வயந்த மாலை வடிவில் தோன்றிக், கொடி நடுக்கு உற்றதுபோல, ஆங்கு-அவன் அடிமுதல் வீழ்ந்து ஆங்கு அருங்கணிர் உகுத்து. 175 "வாச மாலையின் எழுதிய மாற்றம் தீ தீலேண், பிழைமொழி செப்பினை ஆதலின், கோவலன் செய்தாண் கொடுமை " என்று. எண்முண்

மாதவி மயங்கி, வான்துயர் உற்று. "மேலோர் ஆயினும், நூலோர் ஆயினும், 180

பால்வகை தெரிந்த பகுதியோர் ஆயினும், பிணிஎனக் கொண்டு பிறக்கிட்டு ஒழியும்,