பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேட்டுவ வரி

77

கூற்றுறழ் முண்பொடு கொடுவில் ஏந்தி, வேற்றுப்புலம் போகி, நல் வெற்றம் கொடுத்துக் கழிபேர் ஆண்மைக் கடன்பார்த்து; இருக்கும், விழிநுதற் குமரி, விண்ணோர் பாவை, மையறு சிறப்பின் வான நாடி ஐயைதன் கோட்டம் அடைந்தனர் ஆங்கு எண்

12. வேட்டுவ வரி

(கொச்சகக் கலி) ஒய்வு கொள்ளல் கடுங்கதிர் திருகலின் நடுங்களுர் எய்தி, ஆறுசெல் வருத்தத்துச் சீறடி சிவப்ப நறும்பல் கூந்தல் குறும்பல உயிர்த்து-ஆங்கு, ஐயை கோட்டத்து எய்யா ஒருசிறை வருந்துநோய் தணிய இருந்தனர். உப்பால்

சாலினி முழக்கம் வழங்குவில் தடக்கை மறக்குடித் தாயத்துப் பழங்கடன் உற்ற முழங்குவாய்ச் சாலினி தெய்வம் உற்று மெய்ம்மயிர் நிறுத்துக் கை எடுத்து ஒச்சிக் கானவர் வியப்ப, இடுமுள் வேலி எயினர்கூட் டுண்ணும் நடுஊர் மன்றத்து அடிபெயர்த்து ஆடிக், "கல்எண் பேர் ஊர்க் கணநிரை சிறந்தன; வல்வில் எயினர் மண்றுபாழ் பட்டன; மறக்குடித் தாயத்து வழிவளம் சுரவாது, அறக்குடி போல் அவிந்து அடங்கினர் எயினரும்; கலையமர் செல்வி கடன்உணரின் அல்லது, சிலையமர் வென்றி கொடுப்போள் அல்லள்: மட்டுஉண் வாழ்க்கை வேண்டுதிர் ஆயின், கட்டுஉண் மாக்கள்! கடந்தரும்" என-ஆங்கு

215