பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம் பதிகம்

குறவர் உரை குணவாயிற் கோட்டத்து அரசு துறந்து இருந்த குடக்கோச் சேரல் இளங்கோ வடிகட்குக் குன்றக் குறவர் ஒருங்குடன் கூடிப், "பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல், ஒருமுலை இழந்தாள் ஓர் திருமா பத்தினிக்கு, 5 அமரர்க்கு அரசன் தமர் வந்து ஈண்டி, அவள் காதல் கொழுநனைக் காட்டி, அவளொடு எம் கண்புலம் காண விண்புலம் போயது இறும்பூது போலும் அஃது அறிந்தருள் நீ" என

சாத்தனார் உரை

அவள்ை உழை இருந்த தண்தமிழ்ச் சாத்தன் 10 'யாண் அறிகுவன் அது பட்டது என்று உரைப்போண். 'ஆரங் கண்ணிச் சோழன் மூதூர்ப் பேராச் சிறப்பின் புகா அர் நகரத்துக் கோவலன் எண்பாண் ஓர் வாணிகண் அவ்வூர் நாடகம் ஏத்தும் நாடகக் கணிகையொடு 15 ஆடிய கொள்கையின் அரும்பொருள் கேடுறக் கண்ணகி எண்பாள் மனைவி அவள்கால் பணி அமை சிலம்பு பகர்தல் வேண்டிப் பாடல்சால் சிறப்பிற் பாண்டியன் பெருஞ்சீர் மாட மதுரை புகுந்தனன், அது கொண்டு 20 மண்பெரும் பீடிகை மறுகிற் செல்வோன் பொண்செய் கொல்லண் தண்கைக் காட்டக் கோப்பெருந் தேவிக்கு அல்லதை, இச்சிலம்பு யாப்புறவு இல்லை ஈங்கு இருக்க' என்று ஏகிப் பண்டுதான் கொண்ட "சில் அரிச் சிலம்பினைக் 25 கண்டனண் பிறன் ஓர் கள்வன் கை" என