பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 சிலப்பதிகாரம்

குமரியின் கோலம்

இட்டுத் தலை எண்ணும் எயினர் அல்லது 20 சுட்டுத் தலைபோகாத் தொல்குடிக் குமரியைச் சிறுவெள் அரவின் குருளைநாண் சுற்றிக் குறுநெறிக் கூந்தல் நெடுமுடி கட்டி, இளைசூழ் படப்பை இழுக்கிய ஏனத்து வளைவெண் கோடு பறித்து, மற்றது 25 முளைவெண் திங்கள் எண்ணச் சாத்தி, மறம்கொள் வயப்புலி வாய்பிளந்து பெற்ற மாலை வெண்பல் தாலிநிரை பூட்டி வரியும் புள்ளியும் மயங்கு வாண்புறத்து உரிவை மேகலை உடீஇப், பரிவொடு 30 கருவில் வாங்கிக் கையகத்துக் கொடுத்துத் திரிதரு கோட்டுக் கலைமேல் ஏற்றிப் பாவையும், கிளியும். துTவி அம்சிறைக் கானக் கோழியும், நீனிற மஞ்ஞையும், பந்தும், கழங்கும், தந்தனர் பரசி 35 வண்ணமும், சுண்ணமும், தண்ணறுஞ் சாந்தமும், புழுக்கலும், நோலையும். விழுக்குடை மடையும், பூவும், புகையும். மேவிய விரையும், ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின்வர ஆறெறிபறையும், சூறைச் சின்னமும், 40 கோடும், குழலும், பீடுகெழு மணியும், கணங்கொண்டு துவைப்ப, அணங்குமுன் நிறீஇ விலைப்பலி உண்ணும் மலர்ப்பலி பீடிகைக் கலைப்பரி ஊர்தியைக் கைதொழுது ஏத்தி.

சாலினி உரை இணைமலர்ச் சீறடி இனைந்தனள் வருந்திக் 45 கணவனோடு இருந்த மணமலி கூந்தலை: "இவளோ, கொங்கச் செல்வி; குடமலை யாட்டி, தெண்தமிழ்ப் பாவை செய் தவக் கொழுந்து,