பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேட்டுவ வரி

79

ஒருமா மணிஆய், உலகிற்கு ஓங்கிய திருமா மணி" எனத் தெய்வம் உற்று உரைப்பப் பேதுறவு மொழிந்தனள் மூதறிவுஆட்டி' என்று. அரும்பெறல் கணவண் பெரும்புறத்து ஒடுங்கி, விருந்தின் மூரல் அரும்பினள் நிற்ப

தெய்வம் அருளல் மதியின் வெண்தோடு சூடுஞ் செண்ணி, நுதல்கிழித்து விழித்த இமையா நாட்டத்துப் பவள வாய்ச்சி தவளவாள் நகைச்சி நஞ்சுஉண்டு கறுத்தகண்டி, வெஞ்சினத்து அரவுநாண் பூட்டி நெடுமலை வளைத்தோள்: துளை எயிற்று உரகக் கச்சுடை முலைச்சி, வளையுடைக் கையில் சூலம் ஏந்தி, கரியின் உரிவை போர்த்து அணங்கு ஆகிய அரியின் உரிவை மேகலை யாட்டி, சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி, வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை இரண்டுவேறு உருவின் திரண்டதோள் அவுணன் தலைமிசை நின்ற தையல்; பலர் தொழும் அமரி, குமரி, கவுரி, சமரி, சூலி. நீலி, மால் அவற்கு இளங்கிளை ஐயை, செய்யவள். வெய்யவாள் தடக்கைப் பாய்கலைப் பாவை, பைந்தொடிப் பாவை, ஆய்கலைப் பாவை அருங்கலப் பாவை; தமர்தொழ வந்த குமரிக் கோலத்து அமர் இளங் குமரியும் அருளினள் வரியுறு செங்கை வாய்ந்ததால் எனவே.

50

55

60

65

70

74