பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 சிலப்பதிகாரம்

கொற்றவை முற்றம்

உரைப்பாட்டு மடை நாக நாறு நரந்தம் நிரந்தன; ஆவும் ஆரமும் ஓங்கின; எங்கணும்; சேவும் மாவுஞ் செறிந்தன-கண்ணுதல் பாகம் ஆளுடை யாள்பலி முன்றிலே! | செம்பொண் வேங்கை சொரிந்தன, சேயிதழ் கொம்பர் நல்லில வங்கள் குவிந்தன; பொங்கர் வெண்பொரி சிந்தின-புண்குஇளம் திங்கள் வாழ்சடை யாள்திரு முன்றிலே! - 2 மரவம், பாதிரி, புண்னை, மணங்கமழ், குரவம், கோங்கம் மலர்ந்தன கொம்பர்மேல் அரவ வண்டினம் ஆர்த்து உடன் யாழ்செய்யும் திருவ மாற்குஇளை யாள்திரு முன்றிலே. 3

எயினர் குலம் கொற்றவை கொண்ட அணிகொண்டு நின்றஇப் பொற்றொடி மாதர் தவம்எண்னை கொல்லோ? பொற்றொடி மாதர் பிறந்த குடிப்பிறந்த விற்றொழில் வேடர் குலனே குலனும்! 4 ஐயை திருவின் அணிகொண்டு நின்றஇப் பையரவு அல்குல் தவம்எண்னை கொல்லோ? பையரவு அல்குல் பிறந்த குடிப்பிறந்த எய்வில் எயினர் குலனே குலனும்! 5 பாய்கலைப் பாவை அணிகொண்டு நின்றஇவ் ஆய்தொடி நல்லாள் தவமென்னை கொல்லோ? ஆய்தொடி நல்லாள் பிறந்த குடிப்பிறந்த வேய்வில் எயினர் குலனே குலனும்! 6

கொற்றவை பரவல்

ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரிஉடுத்துக் கானத்து எருமைக் கருந்தலைமேல் நின்றாயாலவானோர் வணங்க, மறைமேல் மறையாகி, ஞானக் கொழுந்தாய், நடுக்குஇன்றி யேநிற்பாய்! 7