பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேட்டுவ வரி

81

வரிவளைக்கை வாள் ஏந்தி மாமயிடற் செற்று. கரியதிரி கோட்டுக் கலைமிசைமேல் நின்றாயால்அரி, அரண், பூமேலோன் அகமலர்மேல் மண்னும் விரிகதிர் அம் சோதி விளக்கு ஆகியேநிற்பாய்! சங்கமும் சக்கரமும் தாமரைக் கைஏந்திச், செங்கண் அரிமாண் சினவிடைமேல் நின்றாயால்கங்கை முடிக்கு அணிந்த கண்ணுதலோன் பாகத்து, மங்கை உருவாய் மறைஏத்த வேநிற்பாய்!

கூத்துள் படுதல் ஆங்குக், கொண்றையும் துவளமும் குழுமத்தொடுத்த துண்று மலர்ப்பிணையல் தோள்மேல் இட்டு-ஆங்கு, அசுரர் வாட, அமரர்க்கு ஆடிய குமரிக் கோலத்துக் கூத்துள் படுமேஆய்பொண் அரிச்சிலம்பும் சூடகமும் மேகலையும்

ஆர்ப்ப ஆர்ப்ப, மாயஞ்செய் வாள் அவுணர் வீழ, நங்கை மரக்கால்மேல்

வாளமலை ஆடும் போலும்! மாயஞ்செய் வாள்.அவுணர் வீழ, நங்கை மரக்கால்மேல்

வாளமலை ஆடும்.ஆயின, காயா மலர்மேனி ஏத்தி, வானோர் கைபெய் மலர்-மாரி

காட்டும் போலும்!

கொற்றவை அருள் செய்தல் உட்குஉடைச் சீறுார் ஒருமகன் ஆண்

நிரைகொள்ள உற்ற காலை, வெட்சி மலர்புனைய, வெள்வாள்

உழத்தியும் வேண்டும் போலும் வெட்சி மலர்புனைய, வெள்வாள்

உழத்தியும் வேண்டின், வேற்றுார்க் கட்சியுட் காரி கடிய

குரல் இசைத்துக்காட்டும் போலும்